09 June, 2006

தென்னைமரக்கிளை!

தென்னைமரக்கிளை!

பார்த்து ரசியுங்கள். மின்னஞ்சலில் வந்தது. இந்த மரம் எங்கேயிருக்கிறது என்றுத் தெரியவில்லை. மரங்களில் இத்தகைய மாற்றங்கள் எப்படி உருவாகிறது என்பதை அறிந்தவர் சொல்லுங்களேன்.


24 May, 2006

வலைப்பதிவு ஆய்விற்காக...

மதுமிதா அவர்களின் வலைப்பதிவு ஆய்விற்காக...

வலைப்பதிவர் பெயர்: நாகு

வலைப்பூ பெயர் : கடற்கரை மற்றும் தூரிகைச்சிதறல்

சுட்டி(url) : http://nagaindian.blogspot.com
http://thoorigaichidharal.blogspot.com

ஊர்: சென்னை

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: தினமலர் நாளிதழ்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : அக்டோபர் 2005 ல் ஆங்கிலத்தில் , பிறகு நான்கைந்து மாதங்கள் அந்தப்பக்கமே . பிறகு ஏப்ரல் 2006 முதல் தமிழில் பக்கங்கள் வெளியிட ஆரம்பித்தேன்

இது எத்தனையா வது பதிவு: 15

இப்பதிவின் சுட்டி(url): http://nagaindian.blogspot.com/2006/05/blog-post_24.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: மனதில் பட்டதைச் சொல்ல

அனுபவங்கள்: கொஞ்சம் இனிப்பு , கொஞ்சம் காரம்

பெற்ற நண்பர்கள் : வயது வித்தியாசம் இன்றி நிறைய

கற்றவை: தெரிந்துக்கொள்ளவேண்டியவை இன்னும் இருக்கிறது மணல் போல
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: சுதந்திரம் என்பதன் முழுஅர்த்தம்

இனி செய்ய நினைப்பவை: அவ்வப்போது சொல்லவேண்டியதும், செய்யவேண்டியதும்

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: புத்தகங்களுக்கிடையில் ஒரு ! ஆனால் புத்தகப்புழு . நூலகராக . கொஞ்சம் ஓவியம், கொஞ்சம் இசை இவை என் நெஞ்சம் . அஞ்சல்தலை சேகரி ப்பில் கொஞ்சம் ஆர்வம்

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் யாருக்காவது ஒரு நன்மையாவது செய்துவிட வேண்டும்.

18 May, 2006

வறட்சி மாவட்டங்கள்!!

வறட்சி மாவட்டங்கள்!!


இராமநாதபுரம் போன்ற வறட்சி மாவட்டங்களுக்கு, இந்த புதிய அரசு என்ன செய்வதாக உத்தேசம் என்று தெரியவில்லை. கலர் டீவியும், 2 ரூபாய்
அரிசியும் நிரந்தரமாற்றத்தை ஏற்படுத்தாது. தமிழக அரசு உடனடியாக, விவசாயம் செய்வதற்கு ஏதுவாக, நீர்நிலை ஆதாரங்களை உருவாக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.

17 May, 2006

'H' முத்திரை மீண்டும் தேவை!

'H' முத்திரை மீண்டும் தேவை!

இரண்டு ரூபாய் அரிசி, உண்மையான ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மட்டுமா அல்லது குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்குமா? பொதுப்படையாகப் பார்த்தால் குடும்பஅட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த இரண்டு ரூபாய் அரிசி ஒதுக்கப்படும். அப்படி ஒதுக்கப்படும் அரிசியினை எத்தனை குடும்பத்தினர் வாங்குகின்றனர் என்று பா ர்க்கவேண்டும். உண்மையிலே வாங்காதவர்களின் அரிசி கள்ளமார்க்கெட் பக்கம் ஒதுங்க வாய்ப்புள்ளது.

நியாயவிலைக்ககடைகளின், இத்தகைய செயல்பாடுகளைத் தவிர்க்கத்தான் முந்தைய அரசு 'ஹெச்' முத்திரை மாதிரி சமாச்சாரமெல்லாம் கொண்டுவந்தது.

'ஹெச்' முத்திரை கட்டாயமாக்கப்படவேண்டிய ஒன்று. வேண்டுமானால் வருமானவரம்பினை மாற்றி யமைத்துக்கொள்ளலாம்.

09 May, 2006

ஏரிகள் தேவை!!

ஏரிகள் தேவை!!

குடிநீர் பஞ்சம், வெள்ளப்பெருக்கு இரண்டும் தமிழக மக்களுக்கு, வருடம்தோறும், அனுபவிக்கும் பொன்னான(?) வார்த்தைகள்.

வரும் முதல்வர் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் (உங்கள் கலர் டீவியும் வேண்டாம், கம்ப்யூட்டரும் வேண்டாம், அதனை நாங்களே உழைத்து வாங்க வையுங்கள்; அதற்கான காரணிகளை மட்டும் வகுத்து செயல்படுத்தித்தாருங்கள்) .

ஒவ்வொரு மழை பெய்யும் போதும், இருக்கும்(?) ஏரிகள், குட்டைகள் நிரம்பி (வீட்டுக்குள் புகுந்ததது போக மீதி) கடலுக்குச் சென்றுவிடுகின்றது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பொட்டல் காடுகள், வெற்றுநிலங்கள் (தரிசு), போன்றவை காணப்படுகின்றது. அவற்றில் ஒரு கிலோ மீட்டர் விட்டத்தில் (1 km dia meter) 500 அடி ஆழத்தில் ஒரு குளத்தையோ, குட்டையையோ அல்லது ஏரியையோ அமைக்கவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்தபட்சம் ஒன்று அமைக்கப்படல் வேண்டும். ஊரில் சேரும் மழைநீர் கால்வாய்வழியாக கொண்டு செல்லப்பட்டு சிறு சிறு வடிநீர் குட்டையில் நிரம்பச் செய்து பின்னர் அவை இந்த பெரிய ஏரியில் விழச்செய்யவேண்டும். மனிதர்கள் மாசுபடச்செய்யும் வண்ணம் இல்லாமல் தகுந்த பாதுகாப்பில் இருக்கவேண்டும்.

இதில் சேகரிப்படும் நீர் குறைந்தபட்சம் ஓராண்டுக்காகவது பயன்படும் வண்ணம் கொள்ளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

இந்த நீர்வளத்தினைக் கொண்டு அருகாமையில் இருக்கும் பகுதிகளுக்கு விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பெய்யும் மழையில் நமது தேவைக்குபோக மீதி யைத்தான் கடலுக்கு செல்ல அனுமதி க்கவேண்டும். அந்த அளவிக்கு நாம் நீர்வளபா துகாப்பு மேலாண்மையை கையாளவேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குளங்கள் அமைப்பதற்கு ஆகும் செலவு ஒன்றும்...உங்களின் கலர்டீவி, கம்ப்யூட்டர் செலவினங்களை மிஞ்சாது.

29 April, 2006

கொள்ளைப்போகுது நம் பணம்

நகை வாங்கப் போறீங்களா??

நாளை அட்சயதிரிதியைத் திருநாளாம். ஓருவாரத்துக்கும் மேலாகவே மக்கள் அசந்து மறந்துகூட இருந்துவிடக்கூடாதென்பதற்காக, சிறியது முதல் பெரியது வரை உள்ள அனைத்து நகைக்கடைக்காரர்களும் தங்களுடைய நகைக்கடையில் நகைவாங்குமாறு விளம்பரம் செய்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஓருவர் கிராமுக்கு 30 ரூபாய் தள்ளுபடியாம், இன்னொருவர் செய்கூலி இல்லையாம். மற்றொருவர் சாதாக்கற்களுக்கு விலை இல்லவே இல்லையாம். சிரிப்பாய் இருக்கிறது. சாதாக்கற்களுக்கு விலையில்லை என்றால் கல்லின் எடையை நகையில் கழித்து விட்டு பணம் வாங்கட்டுமே. கல்லையும் சேர்த்து தங்மாகவே எடையைக்கணக்கிட்டு வாங்கிவிட்டு, பின்பு என்ன கல்லுக்கு விலையில்லை என்ற மோசடியான விளம்பரம்?

இந்திய நகைச்சந்தையில் நம் மக்களை, கடைக்காரர்கள் இவ்வளவு காலமாய் மேலும் ஒரு மோசடியில் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். அதாவது ஒவ்வொரு நகையினை செய்யும் பொழுதும், அந்த தங்கத்திலிருந்து, சிறிது சேதாரமாகப் போய்விடும். இந்த சேதாரமானது குறைந்தபட்சம் 2% த்திலிருந்து 18% வரை கணக்கிடப்படுகின்றது. இதற்குரிய பணம் நகைவாங்கும் வாடிக்கையாளரிடம், நகையுடன் சேர்த்தே வசூல் செய்யப்படுகின்றது.

அப்படியானால் இந்த சேதாரத் தங்கமானது யாருக்குச் சொந்தம்? நகைவாங்கும் நமக்கா அல்லது கடைக்காரருக்கா? நமக்குத்தானே சொந்தம். அப்படியிருக்க, இந்த நகைக்கடைக்காரர்கள், இந்தத் தங்கத்தை நமக்கு தரமாட்டார்கள். அவர்களே வைத்துக்கொள்வார்கள்.

இது கொள்ளைதானே?

நீங்க என்ன சொல்றீங்க?

26 April, 2006

கவிதை--நியாயமா?

நியாயமா?
=========

நெற்றி திருநீற்று படகினிலேவீற்றிருக்கும்
வட்டக் குங்குமம்; பொட்டழகு!

வெட்கப்படுகையிலே - உன்
கட்டைவிரல் கோலம் அழகு!

சாலையைக் கடக்கையில்,
எதேச்சையாய் தொடுவது போல் -
நிஜமாய் தொட்ட - உன்
சுட்டுவிரல் ஸ்பரிசம் அழகு!

என்கன்னக் குழிமறைக்க நீ
தருவதாய்ச் சொன்ன -உன் கன்னம்; ஓர் அழகு!

காதலுக்கு அழகு காத்திருப்பது தான்!
என்னை காக்க வைத்துவிட்டு
கல்லறையில் நீ உறங்குவது -- எந்த வகையில் அழகு?

08 April, 2006

ரூபாய் நோட்டில் கிறுக்காதீர்!

ரூபாய் நோட்டில் கிறுக்காதீர்!

இந்த சம்பவம் இன்று நேற்று மட்டுமல்ல...தினந்தோறும் நடைபெற்றுதான் வருகின்ற ஒன்று.

சென்னையில் அசோக்நகரில் 24 மணிநேர வங்க்கிளை ஒன்று உள்ளது. ISO சான்றளித்த வங்கி. வங்கியின் காசாளுனர் அருகான்மையில் ஒரு அறிவிப்பு பலகையில் ஆங்கிலத்தில் சிலவாசகங்கள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்று...ரூபாய் தாள்களின் மீது எதனையும் கிறுக்கக்கூடாது என்று. ஆனால் அந்த அறிவிப்பு யாருக்கு என்று மட்டும் போடவில்லை. (ஆமாம்...நமக்கா அல்லது வங்கி ஊழியர்களுக்கா?)

கொஞ்சம் மொத்தமாக (பத்து இருபது நோட்டுகளை) கொண்டுபோய் கொடுங்களேன். உடனே, காசாளுநர் அதனை வாங்கி எண்ணி இரப்பர் பேண்டு போட்டு, அதன் வாட்டர்மார்க் மீது அதன் எண்ணிக்கையினை எழுதி ஒரு வட்டம் போடுவார். (இத்தனைக்கும் இது முழுமையும் கணிணிமயமாக்கப்ட்ட வங்கியாம்....சிரிப்பு வருதுங்கோ!!) அதே வங்கியில் சில மேதாவி காசாளுநர்கள் இருக்கின்றார்கள். ஆமாம், சிலராவது வாட்டர்மார்க் மீது மட்டும் தான் கிறுக்கின்றனர். ஆனால் அவர்களோ வாட்டர்மார்க்கின் கடைகோடியின் காந்திபடத்தின் மீது (right side of INR from water mark). ரூபாய்நோட்டின் மீது கிறுக்கக்கூடாது என்று போட்டிருக்கே...என்று அப்பாவித்தனமாக கேட்டேனுங்கோ...அதற்கு அவர் ஒரு பதில் சொன்னார் பாருங்கோ....அப்படியே புல்லரிச்சு போய்ட்டேனுங்க... அதாவது வாட்டர் மார்க் மீது மட்டும் கிறுக்கக்கூடாதுன்னு உத்தரவாம்.....
ஒரு காசாளுநர் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 100 நோட்டுகளில் கிறுக்கினால், ஒரு வருடத்தில்....அதே போல் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கியில் நடந்தால்....அடக்கடவுளே!!!
வேலியே பயிரை மேய்கிறதே!!!!

இது மட்டும் அல்ல....இந்திய ரயில்வே ரிசர்வேசன் டிக்கட் எடுக்கச்செல்லும் போதும், கவுன்ட்டரில் (98%) இதே கூத்து தான்.
அன்பர்களே...இனிமேல் நீங்கள் எங்கு பணபரிமாற்றம் செய்யும் போதும் காசாளுநர்கள் ரூபாய் நோட்டின் மீது கிறுக்கினால், அங்கேயே கண்டியுங்கள். உங்கள் அலுவலகத்தின் அக்கவுண்டன்ட் கூட இது போல செய்கின்றாரா என்று பாருங்கள்.....திருத்துங்கள்....
அல்லது குறைந்தபட்சம் ....நீங்கள் கிறுக்குவதையாவது நிறுத்துங்கள்....செய்வீர்களா?

மாறுங்கள்....தானே மாறுவார்கள்

மாறுங்கள்....தானே மாறுவார்கள்.

தற்போது SBI ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவவனவன் படிச்சிட்டு வேலையில்லையின்னைன்னு நொந்துநூடுல்சு ஆகிகிட்டு இருக்கானுங்க....இவுங்கக என்னன்னா வேலைநிறுத்தம் அது இதுன்னு இம்சைபடுத்துறாங்க...

இதுனால எத்தனை பேரு கடினப்படுகின்றார்கள் என்று கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும். அரசின் பென்சன் பெரும்பாலம் இந்தவங்கியின் மூலமாகத்தான் வருகின்றது. இந்த சூழலில் இவர்களின்வேலை நிறுத்தபோராட்டத்தினால் எத்தனை பேர் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டிருப்பார்கள்.

சரி விசயத்திற்கு வருவோம்.

பென்சன்தாரர்களைத்தவிர மற்ற அனைவரும், இந்த வேலைநிறுத்தம் நின்றவுடன் இந்த வங்கிக்கு சென்று நமது கணக்கினை கேன்சல் செய்து விட்டு மற்றொரு அரசு (சரி உங்க இஷ்டப்பட்ட வங்கி) வங்கியில் கணக்கை தொடங்கினால் இவர்கள் பாடு என்னவாகும்...
நான் தயார் !!! நீங்கள் தயாரா???
Related Posts Plugin for WordPress, Blogger...