08 April, 2006

ரூபாய் நோட்டில் கிறுக்காதீர்!

ரூபாய் நோட்டில் கிறுக்காதீர்!

இந்த சம்பவம் இன்று நேற்று மட்டுமல்ல...தினந்தோறும் நடைபெற்றுதான் வருகின்ற ஒன்று.

சென்னையில் அசோக்நகரில் 24 மணிநேர வங்க்கிளை ஒன்று உள்ளது. ISO சான்றளித்த வங்கி. வங்கியின் காசாளுனர் அருகான்மையில் ஒரு அறிவிப்பு பலகையில் ஆங்கிலத்தில் சிலவாசகங்கள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்று...ரூபாய் தாள்களின் மீது எதனையும் கிறுக்கக்கூடாது என்று. ஆனால் அந்த அறிவிப்பு யாருக்கு என்று மட்டும் போடவில்லை. (ஆமாம்...நமக்கா அல்லது வங்கி ஊழியர்களுக்கா?)

கொஞ்சம் மொத்தமாக (பத்து இருபது நோட்டுகளை) கொண்டுபோய் கொடுங்களேன். உடனே, காசாளுநர் அதனை வாங்கி எண்ணி இரப்பர் பேண்டு போட்டு, அதன் வாட்டர்மார்க் மீது அதன் எண்ணிக்கையினை எழுதி ஒரு வட்டம் போடுவார். (இத்தனைக்கும் இது முழுமையும் கணிணிமயமாக்கப்ட்ட வங்கியாம்....சிரிப்பு வருதுங்கோ!!) அதே வங்கியில் சில மேதாவி காசாளுநர்கள் இருக்கின்றார்கள். ஆமாம், சிலராவது வாட்டர்மார்க் மீது மட்டும் தான் கிறுக்கின்றனர். ஆனால் அவர்களோ வாட்டர்மார்க்கின் கடைகோடியின் காந்திபடத்தின் மீது (right side of INR from water mark). ரூபாய்நோட்டின் மீது கிறுக்கக்கூடாது என்று போட்டிருக்கே...என்று அப்பாவித்தனமாக கேட்டேனுங்கோ...அதற்கு அவர் ஒரு பதில் சொன்னார் பாருங்கோ....அப்படியே புல்லரிச்சு போய்ட்டேனுங்க... அதாவது வாட்டர் மார்க் மீது மட்டும் கிறுக்கக்கூடாதுன்னு உத்தரவாம்.....
ஒரு காசாளுநர் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 100 நோட்டுகளில் கிறுக்கினால், ஒரு வருடத்தில்....அதே போல் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கியில் நடந்தால்....அடக்கடவுளே!!!
வேலியே பயிரை மேய்கிறதே!!!!

இது மட்டும் அல்ல....இந்திய ரயில்வே ரிசர்வேசன் டிக்கட் எடுக்கச்செல்லும் போதும், கவுன்ட்டரில் (98%) இதே கூத்து தான்.
அன்பர்களே...இனிமேல் நீங்கள் எங்கு பணபரிமாற்றம் செய்யும் போதும் காசாளுநர்கள் ரூபாய் நோட்டின் மீது கிறுக்கினால், அங்கேயே கண்டியுங்கள். உங்கள் அலுவலகத்தின் அக்கவுண்டன்ட் கூட இது போல செய்கின்றாரா என்று பாருங்கள்.....திருத்துங்கள்....
அல்லது குறைந்தபட்சம் ....நீங்கள் கிறுக்குவதையாவது நிறுத்துங்கள்....செய்வீர்களா?

5 comments:

Mani said...

தம்பி,
கூடவே இந்த பாழாய்போன காதலர்க்கும் ஒரு கோரிக்கை வைங்க,

"I Love Priya" அப்படின்னு கிறுக்ககூடாதுன்னு.

Mani said...

தம்பி,

என் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டு சிறப்பு பதிவு எதுவும் கிடையாதா?

மணி.

தேசாந்திரி said...

தங்கள் பதிவுகள் அனைத்தும் சிந்தையைத் தூண்டுவதாக இருக்கின்றன. நல்ல பதிவுகள்.

Sivabalan said...

நல்ல பதிவு!!

Sundar said...

இன்னா மாமு சோக்கா சொல்லிட்டியே கிறுக்காதனு.... ரூவா நோட்டு அச்சடிக்கிறகிரவன் என்ன பேமானினு நெனசிகினுகீரயா..?? அவன் எதுக்கு அதுல வெல்ல வட்டம் போட்டிருக்கான்னு தெரிஞ்சிகினுதான் பேசிகினுகீரயா?? அதுல நாங்க அட்ரஸ் எழுதி வெல்லாடு்வும், லவ்வர் பேரெழுதி வெல்லாடவும், ஸ்டைலா கையெழுத்து போட்டு வெல்லாடவும், பேனா மைய கொட்டி வெல்லாடவும், ஸ்டாப்லர் பின் அட்சி வெல்லாடவும் தான் கண்டுபுடிச்சிகீரான். நானெல்லம் இந்திய குடிமவன் மாமு... யாராண்ட வந்து அட்வைசு வுட்டுகினுகீர?!

Related Posts Plugin for WordPress, Blogger...