13 January, 2007

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் - ஒரு பார்வை

தற்போது மத்திய அரசு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மான்யம் வழங்கி வருகிறது. இந்த மான்ய விலை சிலிண்டரானது பொதுமக்கள் அனைவருக்கும் கிடைத்து வருகிறது (ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி). ஆனால் இளகுரக வாகனங்கள் வைத்திருக்கும் சிலர், இப்படி மான்யவிலையில் வழங்கப்பெரும் சிலிண்டர்களை தங்கள் வீட்டின் உபயோகத்திற்கு மட்டும் இன்றி, வாகனங்களுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனைக் கட்டுப்படுத்த ஒரு எரிவாயு உருளை வாங்கிய தேதியில் இருந்து, இருபத்தோரு நாட்களுக்குப் பின்னரே, மற்றொரு உருளைக்கு பதிவு செய்யமுடியும் என்று விதிமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைதான் சிலவேளைகளில் நம்மை கஷ்டப்படுத்துகிறது. பல்வேறு சூழ்நிலைகாரணமாக முன்னரே எரிவாயு உருளை தீர்ந்து போகும்நேரங்களில், குடும்பத்தினர் படும்பாடு சொல்லி மாளாது.

அதற்கு பதில் அரசு கீழ்க்காணுமாறு மாற்றியமைத்தால் உபயோகமாக இருக்குமே!

1. உயர்வருவாய் வகுப்பினருக்கு மான்ய விலையில் எரிவாயு உருளை வழங்கக்கூடாது. அவர்களுக்கு மான்யமற்ற விலையிலேயே உருளை வழங்கவேண்டும். வேண்டுமானால், அவர்கள் உபயோகிக்கும் உருளையின் பணத்திற்கு, வருமானவரி விலக்கு அளிக்கலாம்.

2. சமையல் எரிவாயு உருளை பயன்படுத்தப்படும் வாகனங்கள் பிடிபட்டால், குறைந்தபட்சம் ஒருலட்ச ரூபாய் தண்டத்தொகை கட்டப் பணிக்கப்படவேண்டும். அப்படி அவர்களால் செலுத்த இயலாத சூழலில் வாகனத்தில் ஏலத்தில் விட்டு பணத்தினை கையகப்படுத்த வேண்டும். இது நிச்சம் தவறு செய்பவர்களை தடுக்கும்.

3. நடுத்தர மற்றும் ஏழைகளுக்கு இதே இருபத்தோரு நாட்கள் நிபந்தனை நீடித்திட வேண்டும். ஆனால் இருபத்தோரு நாட்களுக்கு முன்னதாக எரிவாயு உருளைத் தேவைப்பட்டால், மான்யமற்ற விலையில் உடனடியாக வழங்கிட வேண்டும்.
Related Posts Plugin for WordPress, Blogger...