Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

13 October, 2012

வா... ...




பேசாத உதடுகள்
பேசும் கண்கள் ...
பிறக்கிறது - கவிதை!
கண்ணே உனை கண்டவுடன்

காற்றில் ஊசலாடும் உன் முன்
நெற்றி முடிபோல் - அலைபாயுமென் மனதை
அள்ளி முடிக்க துள்ளியோடி வா வாடா மலரே
என் இதய தோட்டத்தின்
ஒரே மலரே!

நாகு

15 September, 2009

அந்த வார்த்தைகள்

நீ சொன்ன
எத்தனையோ வார்த்தைகளை மறக்க முடிந்த
என்னால்,
ஏனோ தெரியவில்லையடி,
மறக்க முடியவில்லை;
"என்னை மறந்து விடு" என்ற அந்த வார்த்தைகளை.

விட்டுக்கொடுத்தேன்

விட்டுக்கொடுத்தால்
வாழ்க்கை இனிக்குமாம்; காதலிச் சொன்னாள்.
விட்டுக்கொடுத்தேன் அவளை.

14 September, 2009

நீயும் சினிமாவும்

"அவருக்கு சினிமான்னா சுத்தமா
பிடிக்காது மாமி
"
இது
எதிர் வீட்டு மாமியிடம் என் மனைவி.

நான்
திரைப்படங்கள் பார்ப்பதை நிறுத்தி
வருடங்கள் பல உருண்டோடி விட்டன,
நாம் பார்த்த படமே
எனக்கு கடைசிப் படமாக இருக்கட்டுமே-
இது நான்!

நான் என்று கூறியதில்
நீயும் ஒளிந்து கொண்டிருக்கிறாய் என்ற நினைப்பில்
இன்னமும் நான்!

12 September, 2009

என் இதய நூலகம்

என் இதய நூலகத்தின்
ஒரே நூல்
நீ

தினந்தோறும் கிழியும் இதயம்

நீ விட்டுச் சென்ற பின்,
கிழிக்கப்படாத தினசரி காலண்டர்
கிழித்துப்போடுகிறது என் இதயத்தை
தினம் தினம்!

10 September, 2009

மறந்து போகிறேன்

நீ இமைக்க மறக்கும் போதெல்லாம்
நான் சுவாசிக்க மறந்து போகிறேன்!

எது அழகு?

எது அழகு?

நெற்றித் திருநீற்று படகினிலே;
வட்டக் குங்குமம் பொட்டழகு!

வெட்கப்படுகையிலே உன்
கட்டைவிரல் கோலம் அழகு!

சாலையைக் கடக்கையில்
எதார்த்தமாய் தொடுவது போல்,
நிஜமாய் தொட்ட உன்
சுட்டுவிரல் ஸ்பரிசம் அழகு!

என் கன்னக் குழி மறைக்க,
நீ தருவதாய் சொன்ன
உன் கன்னம் ஓர் அழகு

காதலுக்கு அழகு காத்திருப்பதுதான்;
ஆனாலும்
எனை காக்க வைத்துவிட்டு,
கல்லறையில் உறங்குவது - உனக்கு
எந்த வகையில் அழகு?
Related Posts Plugin for WordPress, Blogger...