26 April, 2006

கவிதை--நியாயமா?

நியாயமா?
=========

நெற்றி திருநீற்று படகினிலேவீற்றிருக்கும்
வட்டக் குங்குமம்; பொட்டழகு!

வெட்கப்படுகையிலே - உன்
கட்டைவிரல் கோலம் அழகு!

சாலையைக் கடக்கையில்,
எதேச்சையாய் தொடுவது போல் -
நிஜமாய் தொட்ட - உன்
சுட்டுவிரல் ஸ்பரிசம் அழகு!

என்கன்னக் குழிமறைக்க நீ
தருவதாய்ச் சொன்ன -உன் கன்னம்; ஓர் அழகு!

காதலுக்கு அழகு காத்திருப்பது தான்!
என்னை காக்க வைத்துவிட்டு
கல்லறையில் நீ உறங்குவது -- எந்த வகையில் அழகு?

12 comments:

பொன்ஸ்~~Poorna said...

கவிதைக்கு :) உங்க காதலிக்கு :(

Mani said...

காதல் பட்ட பாவத்தால், காயப்பட்ட இதயங்களே, கண்ணீரை மருந்தாக்குங்களேன்.
கண்ணீரை மருந்தாக்குங்களேன்.
கண்ணீரை மருந்தாக்குங்களேன்.

அட பொன்னான மனசே, பூவான மனசே வக்காத பொண்ணுமேல ஆச, நீ வக்காத பொண்ணுமேல ஆச....

கவிதா | Kavitha said...

கல்லரைக்கு போனவங்களுக்காக எல்லாம் காத்திருக்காதீங்க..

Radha N said...

தங்கள் கருத்துக்கு நன்றி கவிதா.

காத்திருத்தல் கூட ஒரு சுகம் தானே!

நாமக்கல் சிபி said...

:(

//காதல் பட்ட பாவத்தால், காயப்பட்ட இதயங்களே, கண்ணீரை மருந்தாக்குங்களேன்.
கண்ணீரை மருந்தாக்குங்களேன்.
கண்ணீரை மருந்தாக்குங்களேன்//

அட! இந்தப் பாட்டை வேற நினைவு படுத்திட்டீங்களா?
:((

வல்லிசிம்ஹன் said...

நாகு, கவிதை இனிமை.காதல் சோகம்.
கல்லறை காக்கப்படலாம்,
காதலும் காக்க படலாம்,
வெளியில் வந்து சொல்வது
உங்களைக் காக்கும்
அன்புடன்.

Radha N said...

சிபி, வள்ளி தங்கள் வருகைக்கு நன்றி

Gnaniyar @ நிலவு நண்பன் said...

காத்திருக்கும்போது
எதுவுமே வருவதில்லை
காதல் முதல்
கட்டபொம்மன் பேருந்து வரை :)

Radha N said...

// காத்திருக்கும்போது
எதுவுமே வருவதில்லை
காதல் முதல்
கட்டபொம்மன் பேருந்து வரை :) //

நிலவு நண்பரே,
ரொம்ப அனுபவிச்சு சொல்றாப்ள இருக்கு!

Unknown said...

//என்கன்னக் குழிமறைக்க நீ
தருவதாய்ச் சொன்ன -உன் கன்னம்; ஓர் அழகு!//

:))

Unknown said...

காத்திருத்தல் -> காத்தல் -> காதல்???

Radha N said...

//காத்திருத்தல் -> காத்தல் -> காதல்???//

ஆம், சுகமான சுமை!!

Related Posts Plugin for WordPress, Blogger...