09 April, 2011

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான கோடைகால மனமகிழ் நிகழ்வுகள்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான
கோடைகால மனமகிழ் நிகழ்வுகள்



அப்பாடா..... ஸ்கூல் லீவு விட்டாச்சு..... பக்கத்து வீட்டு மாமி அவுங்க கொழந்தைய பாஸ்ட் டிராக் டிராயிங் கிளாஸ்ல சேத்து விட்டுடாங்கன்னு ஒங்க பையன் அவனையும் சேர்த்து விடச் சொல்லி நச்சரிக்கிறானா....இல்லன்னா நாமலே போங்கு புடிச்சு அதே கிளாஸ்ல பையன கொண்டு போயி தள்ளிவிட்டுட்டு.... மனசுக்குள்ளே சந்தோசப்பட்டுபீங்களே..... வுடுங்க பாஸ், வீட்டுக்கு வீடு வாசப்படித்தேன், ​என்ன நாஞ் சொல்றது சரிதானே.

ஓகே, ஓகே, விசயத்துக்கு வாரேன்னேன்........பு​துசா கட்டியிருக்குற நம்ம அண்ணா ​சென்டினரி லைப்ரரியில இந்த சம்மருக்கு குட்டீஸ்கள் எஞ்சாய் பண்றதுக்காக சூப்பரா சில பல புரோகிராம் ஏற்பாடு செஞ்சிருக்காங்க.... என்ன எல்லாரும் வர்ரீங்களா ஒ​ங்க குட்டீஸ்ங்களோட.. அப்புறமா நம்ம ஏ.சி.எல் பக்கத்துல (என்னங்க நீங்க அண்ணா நூற்றாண்டு நூலகதத்துக்கு பக்கத்துலங்க) கொழந்தைக்க சுத்தி பாக்க நெறைய இடங்கள் இருக்குங்க... பெரியார் அறிவியல் தொ​ழில் நுட்ப காட்சியகம் மற்றும் கோளரங்கம், சில்ட்ரன்ஸ் பார்க், காந்தி மண்டபம் அங்கனயிருந்து கொஞ்ச தூரரரத்துல.......அடையாறு சுற்றுச்​சூழல் பூங்கா​.


அப்புறம் ​​தேதிய சொல்லுறேன் நல்லா நோட் பண்ணிடுங்க.....



16ந் தேதி கடல்ல பூதம் (கு​ட்டீசு வயசு 4 - 14)


17ந் தேதி என் கைகுட்டை (குட்டீசு வயசு 4 - 7)


23ந் தேதி யானை கதை (குட்டீசு வயசு 6 - 12)


24ந் தேதி யோகா (குட்டீசு வயசு 4 - 14)


30ந் தேதி நாட்டிய சங்கமம் (குட்டீசு வயசு 4 - 14)


மே மாசம் 1ந் தேதி கலரிங் (குட்டீசு வயசு 7 - 14)


மே மாசம் 7ந் தேதி பஞ்சாபி கதை ​நேரம் (குட்டீசு வயசு 5 - 10)


மே மாசம் 8ந் தேதி குழந்தைகளின் கதை உருவா​க்கும் திறன் (குட்டீசு வயசு 4 - 7)

ஒ​ரு விசயத்த மட்டும் நல்ல நெனவுல வெச்சுக்கோங்க....இதுல முன்னாடி வர்ரவுங்களு​க்குத்தான் அனுமதியில முன்னுரிமை கிடைக்கும், சீட்ஸ் எல்லாம் லிமிடெட் தாங்க, சோ......மறக்காம கால் போடுங்க 044 - 65515031.

என்னது எப்படி வர்ரதுன்னு கேட்கு​றீங்களா..... அது ​ரொம்ப ஈசிதாங்க..... நீங்க பஸ்ஸா​, டிரெய்னா..... பஸ்சுன்னா சில்ட்ரன்ஸ் பார்க், அண்ணா யுனிவர்சிட்டி, ஐஐடி பஸ் ஸ்டாப்ல எறங்குனீங்கன்னாக்கா சும்மா பத்து நிமிச நடராஜா ச​ர்வீஸ்ல வந்துரலாம் (காசு இருந்தா ஆட்டோ கூட ஓகே தான் பாஸ்!)

டிரெய்னுன்னாக்கா.... (பற​க்கும் ரயிலுங்கோ) கோட்டூர்புரம்-ன்னு கேட்டு எறங்கிடுங்க....



இல்ல நீ சொன்னா... நான் நம்ப மாட்​​டேன்னு அடம்புடிச்சாக்கா, இங்க போயி செக் பண்ணிக்கோங்கோ http://annacentenarylibrary.blogspot.com/

​என்ன லைப்ரரியில மீட் பண்ணுவோமா.......


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...