17 May, 2006

'H' முத்திரை மீண்டும் தேவை!

'H' முத்திரை மீண்டும் தேவை!

இரண்டு ரூபாய் அரிசி, உண்மையான ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மட்டுமா அல்லது குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்குமா? பொதுப்படையாகப் பார்த்தால் குடும்பஅட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த இரண்டு ரூபாய் அரிசி ஒதுக்கப்படும். அப்படி ஒதுக்கப்படும் அரிசியினை எத்தனை குடும்பத்தினர் வாங்குகின்றனர் என்று பா ர்க்கவேண்டும். உண்மையிலே வாங்காதவர்களின் அரிசி கள்ளமார்க்கெட் பக்கம் ஒதுங்க வாய்ப்புள்ளது.

நியாயவிலைக்ககடைகளின், இத்தகைய செயல்பாடுகளைத் தவிர்க்கத்தான் முந்தைய அரசு 'ஹெச்' முத்திரை மாதிரி சமாச்சாரமெல்லாம் கொண்டுவந்தது.

'ஹெச்' முத்திரை கட்டாயமாக்கப்படவேண்டிய ஒன்று. வேண்டுமானால் வருமானவரம்பினை மாற்றி யமைத்துக்கொள்ளலாம்.

17 comments:

ப்ரியன் said...

நியமான வாதம்...ஆனால் 'H' முத்திரை சென்ற ஆட்சியில் பலமான எதிர்ப்பை சந்தித்தது.

எல்லோருக்கும் அரிசி வாங்குவதில்லை அரிசிக்கு பதில் சர்க்கரைப் பெறுபவர்கள் பலர்...சோ, இப்போது அரிசி வாங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே ரூ.2 க்கு அரிசி கிடைக்கும்...

லக்கிலுக் said...

அய்யோ பாவம்....

2 ரூபாய்க்கு அரிசி கொடுக்க முடியாது என்று கொக்கரித்த கூட்டம் இப்போது கொடுக்கிறார்கள் என்றதுமே அடுத்தக்கட்ட குழப்பம் விளைவிக்கலாமா என்று திட்டமிடுகிறது....

இந்த பதிவில் தெரிவது உங்கள் வயிற்றெரிச்சலே....

Radha N said...

இன்னும் கொஞ்சநாள் பொறுத்துப்பாருங்கள் 'ள்ள்' அய்யோ பாவம் யாருன்னு தெரியும். அடுத்தபட்ஜெட் வரைக்கும்தான் இந்த கும்மாளமெல்லாம்!

பிரியன் அவர்களே, நியாயவிலைக்கடை சர்க்கரைக்கும் வெளிச்சந்தை சர்க்கரைக்கும் வி லைவித்தியாசம் அதிகமில்லை. இது நீண்டநாள் நிலமைதான்.

லக்கிலுக் said...

தேர்தல் முடிவுகள் வந்ததுமே உங்கள் கும்மாளம் அடங்கிடுச்சே..... அது போதும்.... :-)

Chellamuthu Kuppusamy said...

ஜூன் 3 ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் அமுல் படுத்தப்பட எதற்காக பதவியேற்ற இடத்திலேயே (நேரு அரங்கம்) கையெழுத்திட வேண்டிய அவசரம்? தெரியவில்லை.
-குப்புசாமி செல்லமுத்து

லக்கிலுக் said...

////எதற்காக பதவியேற்ற இடத்திலேயே (நேரு அரங்கம்) கையெழுத்திட வேண்டிய அவசரம்?////

காரணம்... அவர் தேர்தல் பிரச்சாரத்தில் பதவி ஏற்ற உடனேயே மூன்று கையெழுத்துகள் இடுவேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தது தான்....

Radha N said...

கையெழுத்திட்டவுடன், என்ன சொன்னார் கவனித்தீர்களா? இரண்டு ரூபாய்க்கு அரசிகொ டுப்பதனால் அரசுக்கு இத்தனை கோடி இழப்பு ஏற்படும் என்றார். ஆக இதனை அவர் மனமுவந்து தரவில்லை, அப்படித்தானே. ஆங்... என்ன கேட்டீங்க..3ம் தேதியன்னைக்கு தர, இன்னைக்கே எதுக்கு கையெழுத்துப்போட்டார்ன்னு தா னே....'சீன்'!

Radha N said...

கலைஞர் மட்டுமல்ல.....இந்தியாவில் எந்த ஒரு அரசியல்வாதியும் கொடுத்த தேர்தல் வாக்குறுதியினை முழுமையாகக் காப்பாற்றப் போவதில்லை. இதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன, அனைத்து தரப்பிலிருந்தும், யாராலும் மறுக்கமுடியாது.

ஆனால், இந்தப்பதிவின் நோக்கமே, நியாயவிலைக்கடையின் பொருட்கள், நியாயமானவர்களைத் தவரி மற்றவர்களைப்(?) போய்ச் சேரக்கூடாது என்பதற்காக என்ன வழிமுறைகளைச் செய்யலாம், அதற்கு முந்தைய ஆட்சியின் ஹெச் முத்திரையினை பயன்படுத்தலாமா என்பது குறித்த விவாதமே தவிர வேறொன்றுமில்லை!

கலைஞரால் கைவிடப்பட்ட வீராணம் திட்டத்தை ஜெ. வால் சாதித்தபோது, ஜெ. வினால் ஆரம்பிக்கப்பட்டு, அவராலேய மூடப்பட்ட ஹெச் முத்திரை திட்டத்தினை ஏன் மீண்டும் செயல்படுத்தமுடியாது?

மா சிவகுமார் said...

சரியான பதிவு. நெல்லுக்குப் போகும் நீர், புல்லுக்குப் போகாமல் தடுப்பது அரசின் கடமை. எல்லா அட்டைதாரர்களுக்கும் அரிசி அனுப்பி வைத்தால் வாங்காதவர்களின் பங்கு கள்ளச் சந்தையில் போகும் அபாயம் அதிகம். தேவைப்படுபவர்களுக்கு மட்டுமான அரிசியை கொடுப்பதுதான் சரியான நிர்வாகம். இல்லையென்றால், அரிசிக் கடைக்காரர்கள்தான் மக்கள் வரிப்பணத்தை ஏப்பம் விடுவார்கள்.

Radha N said...

சரியாச் சொன்னீங்க சிவக்குமார். காமாலைக்காரனுக்கு பாக்குறதெல்லாம் மஞ்சள்ம்பாங்க...அதுமாதிரி பாக்காரு நம்ம தோழர் லக்கி!

லக்கிலுக் said...

வாங்காதவர்கள் அரிசி எல்லாம் கள்ளச் சந்தைக்குப் போக வாய்ப்பில்லை.... எத்தனை ரேஷன் கார்டுகளுக்கு அரிசி வழங்கியிருக்கிறார்கள் என்ற கணக்கு சிவில் சப்ளைஸ் துறைக்கு நன்றாகத் தெரியும்... நாகு உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் உங்க ஊர் ரேஷன் கடைக்காரர் கிட்டே போயி கேளுங்க....

BTW, எச் முத்திரைப் போட்டு கலைஞர் மக்களால் காறி உமிழப்பட வேண்டும் என்ற உங்கள் ஆசை மட்டும் நிறைவேறாது.....

முத்துகுமரன் said...

நல்ல பதிவு நாகு.

பயன் அதற்குரியவர்களுக்குப் போய்ச்சேர வேண்டுமென்பது நியாயமானது. அடிப்படையானது. ஆகையால் இந்த திட்டத்தால் பயன்பெறுபவர்களை வகைப்படுத்துதல் அவசியமாகும். ஏழைகளுக்கு போய்ச்சேருவதை உறுதி செய்யும் அதே நேரத்தில் கள்ளச் சந்தைக்கு போவதை தடுப்பதிலும் அதே அளவு கவனம் செலுத்த வேண்டும்

Sivabalan said...

நாகு,

சரியான வாதம்!!

நிச்சயம் இப்போது அமைந்துருக்கும் அரசு இதை கவனத்தில் கொள்ளவேண்டும்!!

மா சிவகுமார் said...

லக்கி லுக்,

வாங்கதவர்கள் அரிசி நேராக கள்ளச் சந்தைக்குப் போய்ச் சேரும் என்று சொல்லவில்லை, சேரும் சாத்தியங்கள் அதிகம் என்றுதான் பயம். H முத்திரைக்கு நல்ல பேர் இல்லை என்றால் வேறு ஏதாவது வழியில் ஒழுகலைத் தடுப்பது அவசியம். நாகு H முத்திரை என்று சொல்வது அந்த பொருளில்தான் என்று நினைக்கிறேன்.

மா சிவகுமார் said...

லக்கி லுக்,

தேர்தலில் தன்னை எதிர்த்தவர்களுக்கு, தனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் ஒரு கட்சி ஆட்சி அமைக்கிறது. எதிர்த்தவர் புதிய ஆட்சிக்கு எந்த ஆலோசனையும் சொல்லக் கூடாது என்பது சரியல்ல. சொல்வதைப் புரிந்து கொண்டு செயல்படுத்த வேண்டும்.

Radha N said...

//வாங்காதவர்கள் அரிசி எல்லாம் கள்ளச் சந்தைக்குப் போக வாய்ப்பில்லை.... எத்தனை ரேஷன் கார்டுகளுக்கு அரிசி வழங்கியிருக்கிறார்கள் என்ற கணக்கு சிவில் சப்ளைஸ் துறைக்கு நன்றாகத் தெரியும்... நாகு உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் உங்க ஊர் ரேஷன் கடைக்காரர் கிட்டே போயி கேளுங்க....//

அப்படியென்றால், அடிக்கடி தினசரிகளில், ரேசன் அரிசி கடத்திய லாரி பிடிபட்டது என்று செய்திகள் வருகின்றனவே...அது பொய்யா?

Radha N said...

இன்றைய நிலையில், குடும்பஅட்டை என்பது, மாநில அரசின் குடிமைப்பொருள் வழங்க பயன்படும் அடையாள அட்டையாக மட்டுமின்றி, ஒரு குடும்பத்தின் மிகவும் அத்தியாவசியமான (பாஸ்போர்ட்டினை விடமேலான) ஒரு அத்தாட்சியாக உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த ஒருபயன்பா ட்டிற்காக அநேகமான குடும்பத்தினர், இதனை செயல்பாட்டில் வைத்துக்கொண்டிருப்பதற்காக, இரண்டொரு மாதங்களுக்கு ஒருமுறை சர்க்கரை (அநேகமாக இதை) மட்டும் வாங்கிக்கொள்வார்கள்.

இத்தகைய குடும்ப அட்டைகளை அடையாளம் கா ணும் ஊழியர்கள் இந்த எண்ணினைப் பயன்படுத்தி ஊழல் செய்கிறார்கள் (என்ன லக்கி லுக் எங்கே ஓட்டை என்று அடையாளம் தெரி ந்தததா?). ஏன் மற்றபொருட்களை வாங்கவில்லை என்று குறைந்தபட்சம் ஒரு சர்வே எடுத்தால், அரிசி சரியில்லை என்றே வரும். உண்மையும் அதுதா ன். பத்து மூட்டை அரிசியில் ஏழு மூட்டை நன்றாக இருக்காது. (இதில் ஜெ. ஆட்சி என்றோ கருணாநிதி ஆட்சி என்ற வித்தியாசமெல்லா ம் கிடையாது).

ஆகமொத்தம் இவர்களைப் போன்றவர்களையும், வெளிச்சந்தையில் பொருள்கள் வாங்கக்கூடிய தகுதி யுடையவர்களையும் கண்டறிந்து, அவர்களின் குடும்பஅட்டையினை வெறும் அடையாளத்திற்கு மட்டும் பயன்படும் அட்டையாக மாற்றிவிட வேண்டும். ஒருவேளை இத்தகையவர்கள், ஏதாவதொ ருகாரணத்தினால், பொருளாதாரத்தில் நலிவடைந்தால், உடனடியா பொருட்கள் வாங்கிக்கொள்ள ஆவணசெய்யும்படியும், இத்தகைய குடும்ப அட்டைகள் விளங்கவேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...