09 May, 2006

ஏரிகள் தேவை!!

ஏரிகள் தேவை!!

குடிநீர் பஞ்சம், வெள்ளப்பெருக்கு இரண்டும் தமிழக மக்களுக்கு, வருடம்தோறும், அனுபவிக்கும் பொன்னான(?) வார்த்தைகள்.

வரும் முதல்வர் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் (உங்கள் கலர் டீவியும் வேண்டாம், கம்ப்யூட்டரும் வேண்டாம், அதனை நாங்களே உழைத்து வாங்க வையுங்கள்; அதற்கான காரணிகளை மட்டும் வகுத்து செயல்படுத்தித்தாருங்கள்) .

ஒவ்வொரு மழை பெய்யும் போதும், இருக்கும்(?) ஏரிகள், குட்டைகள் நிரம்பி (வீட்டுக்குள் புகுந்ததது போக மீதி) கடலுக்குச் சென்றுவிடுகின்றது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பொட்டல் காடுகள், வெற்றுநிலங்கள் (தரிசு), போன்றவை காணப்படுகின்றது. அவற்றில் ஒரு கிலோ மீட்டர் விட்டத்தில் (1 km dia meter) 500 அடி ஆழத்தில் ஒரு குளத்தையோ, குட்டையையோ அல்லது ஏரியையோ அமைக்கவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்தபட்சம் ஒன்று அமைக்கப்படல் வேண்டும். ஊரில் சேரும் மழைநீர் கால்வாய்வழியாக கொண்டு செல்லப்பட்டு சிறு சிறு வடிநீர் குட்டையில் நிரம்பச் செய்து பின்னர் அவை இந்த பெரிய ஏரியில் விழச்செய்யவேண்டும். மனிதர்கள் மாசுபடச்செய்யும் வண்ணம் இல்லாமல் தகுந்த பாதுகாப்பில் இருக்கவேண்டும்.

இதில் சேகரிப்படும் நீர் குறைந்தபட்சம் ஓராண்டுக்காகவது பயன்படும் வண்ணம் கொள்ளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

இந்த நீர்வளத்தினைக் கொண்டு அருகாமையில் இருக்கும் பகுதிகளுக்கு விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பெய்யும் மழையில் நமது தேவைக்குபோக மீதி யைத்தான் கடலுக்கு செல்ல அனுமதி க்கவேண்டும். அந்த அளவிக்கு நாம் நீர்வளபா துகாப்பு மேலாண்மையை கையாளவேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குளங்கள் அமைப்பதற்கு ஆகும் செலவு ஒன்றும்...உங்களின் கலர்டீவி, கம்ப்யூட்டர் செலவினங்களை மிஞ்சாது.
Related Posts Plugin for WordPress, Blogger...