29 April, 2006

கொள்ளைப்போகுது நம் பணம்

நகை வாங்கப் போறீங்களா??

நாளை அட்சயதிரிதியைத் திருநாளாம். ஓருவாரத்துக்கும் மேலாகவே மக்கள் அசந்து மறந்துகூட இருந்துவிடக்கூடாதென்பதற்காக, சிறியது முதல் பெரியது வரை உள்ள அனைத்து நகைக்கடைக்காரர்களும் தங்களுடைய நகைக்கடையில் நகைவாங்குமாறு விளம்பரம் செய்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஓருவர் கிராமுக்கு 30 ரூபாய் தள்ளுபடியாம், இன்னொருவர் செய்கூலி இல்லையாம். மற்றொருவர் சாதாக்கற்களுக்கு விலை இல்லவே இல்லையாம். சிரிப்பாய் இருக்கிறது. சாதாக்கற்களுக்கு விலையில்லை என்றால் கல்லின் எடையை நகையில் கழித்து விட்டு பணம் வாங்கட்டுமே. கல்லையும் சேர்த்து தங்மாகவே எடையைக்கணக்கிட்டு வாங்கிவிட்டு, பின்பு என்ன கல்லுக்கு விலையில்லை என்ற மோசடியான விளம்பரம்?

இந்திய நகைச்சந்தையில் நம் மக்களை, கடைக்காரர்கள் இவ்வளவு காலமாய் மேலும் ஒரு மோசடியில் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். அதாவது ஒவ்வொரு நகையினை செய்யும் பொழுதும், அந்த தங்கத்திலிருந்து, சிறிது சேதாரமாகப் போய்விடும். இந்த சேதாரமானது குறைந்தபட்சம் 2% த்திலிருந்து 18% வரை கணக்கிடப்படுகின்றது. இதற்குரிய பணம் நகைவாங்கும் வாடிக்கையாளரிடம், நகையுடன் சேர்த்தே வசூல் செய்யப்படுகின்றது.

அப்படியானால் இந்த சேதாரத் தங்கமானது யாருக்குச் சொந்தம்? நகைவாங்கும் நமக்கா அல்லது கடைக்காரருக்கா? நமக்குத்தானே சொந்தம். அப்படியிருக்க, இந்த நகைக்கடைக்காரர்கள், இந்தத் தங்கத்தை நமக்கு தரமாட்டார்கள். அவர்களே வைத்துக்கொள்வார்கள்.

இது கொள்ளைதானே?

நீங்க என்ன சொல்றீங்க?
Related Posts Plugin for WordPress, Blogger...