18 May, 2006

வறட்சி மாவட்டங்கள்!!

வறட்சி மாவட்டங்கள்!!


இராமநாதபுரம் போன்ற வறட்சி மாவட்டங்களுக்கு, இந்த புதிய அரசு என்ன செய்வதாக உத்தேசம் என்று தெரியவில்லை. கலர் டீவியும், 2 ரூபாய்
அரிசியும் நிரந்தரமாற்றத்தை ஏற்படுத்தாது. தமிழக அரசு உடனடியாக, விவசாயம் செய்வதற்கு ஏதுவாக, நீர்நிலை ஆதாரங்களை உருவாக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.

6 comments:

லக்கிலுக் said...

5 வருடமாக இருந்த அரசு வறட்சிப் பிரதேசங்களுக்கு என்ன செய்தது என்று சொல்ல முடியுமா?

பொறுப்பேற்று 5 நாட்களே ஆன அரசிடம் எல்லாவற்றையும் எதிர்பார்க்கும் நமக்கு 5 வருடங்களாக "கும்மி" அடித்துக் கொண்டிருந்தவர்களை கேட்க வக்கில்லாமல் போய் விட்டதா?

rajkumar said...

ஏதோ கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காக இரண்டு வரிகள் எல்லாம் எழுதாதீர்கள். பழைய அரசு இருந்த போதும் இதே நிலைதானே? அப்போது இதைப்பற்றி எங்காவது எழுதியுள்ளீர்களா?இப்போது நீர்நிலைகளை ஏற்படுத்த கருணாநிதி கையில் அலாவுதின் பூதம் இருக்கிறதா?

சமூக அக்கைறையை பொறுப்புணர்வுடன் வெளிப்படுத்துங்கள்

Radha N said...

//ஏதோ கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காக இரண்டு வரிகள் எல்லாம் எழுதாதீர்கள். பழைய அரசு இருந்த போதும் இதே நிலைதானே? அப்போது இதைப்பற்றி எங்காவது எழுதியுள்ளீர்களா?இப்போது நீர்நிலைகளை ஏற்படுத்த கருணாநிதி கையில் அலாவுதின் பூதம் இருக்கிறதா?

சமூக அக்கைறையை பொறுப்புணர்வுடன் வெளிப்படுத்துங்கள் //

பழைய அரசு இருந்தபோதும் இதே நிலைதா னே? என்று கேட்கிறீர்களே, கருணாநிதிக்கு அப்புறமும் இதே கேள்வி வந்துவிடக்கூடாதல்லவா? அப்படியென்றால் கருணாநிதிக்கு அதனை நி னைவுபடுத்தக்கூடாதா?

இந்தமாதிரி வறட்சிபகுதிகள் எல்லாம் அவர் கண்ணில் படவில்லையா! அல்லது பகுதிகள் இருப்பதை நினைக்கவே மாட்டாரா? ஆனால் அவர் கண்ணில் பட்டது கண்ணகி சிலை மட்டும் தான்.

முதல்வரிடம் நாம் எதிர்பார்ப்பது, ஒருவேளை சாப்பாடை அல்ல, அந்த சாப்பாடு வாங்கிக்கொள்ள ஒரு வேலை! அதேபோல் தான் இதுவும்.

இவ்வளவு நாட்களாக திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சிசெய்து இந்தப்பகுதிகளுக்கு என்ன புரட்சிகரமான மாற்றங்களைச் செய்துவி ட்டன. முதல் பிரச்சினையே நீர்தான்! மழைபெய்தால் வெள்ளம், இல்லாவிட்டால் வறட்சி! இதனை போக்குவதற்கான முயற்சிகள் ந டைபெறவேண்டுமென்ற அவா தான்.

//ஏதோ சொல்லவேண்டும் என்பதற்காக இரண்டு வரி கள் ...//

ஒரு சிறுதீப்பொறிதான் மிகப்பெரிய தீயினை உருவாக்கும். நான் எதிர்பார்ப்பதெல்லாம், என்னால் கி ள்ளித்தான் போடமுடியும், உங்களால் முடிந்தால் அள்ளிப்போடுங்களேன்!

Radha N said...

Dear luckylook.....

அதே கேள்வியை உங்களை நோக்கி நான் தி ருப்புகிறேன். மூன்று முறை முதல்வரான கலைஞர் ஏன்ன செய்தார்?

இதுவரை என்ன செய்தார் என்பதைவிட, இனிமேல் என்னசெய்வார் என்பதைதான் யோசிக்கவேண்டும்.

முதல்வராவதற்கு முன்புவரைதான் அவர் தனி ப்பட்ட கட்சிதலைவர். இப்போது அவர் ஒரு மாநி லத்தின் முதல்வர், அவரை கேட்க யா ருக்கும் உரிமை உண்டு, இதில் கட்சிபேதமில்லை நண்பரே!

லக்கிலுக் said...

நாகு!

உங்கள் கருத்துக்கள் நடுநிலையாய் இருந்தால் யாரும் உங்களை இதுபோல கேட்கப்போவதில்லை... நீங்கள் அதிமுகவுக்கு ஆதரவாக எழுதப்போகிறேன் என்று சொல்லிவிட்டு இதுபோல எழுதுங்கள்.... நாங்கள் யாரும் உங்களை கேள்வி கேட்க மாட்டோம்....

ஆனால் தமிழ்நாட்டின் மீது உங்களுக்கு மட்டுமே அக்கறை இருப்பது போல ஒரு போலியான தோற்றத்தை நடுநிலை வேஷம் போட்டு உருவாக்கப் பார்க்காதீர்கள்....

நீர்நிலைகளை காக்க வேண்டும் என்ற அக்கறை இருந்ததால் தான் கலைஞர் 98ஆம் ஆண்டு காவிரி தூர் வாரினார்... அவரது சென்ற ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் ஏரிகள் தூர் வாரினார்....

ஏதாவது ஒரு பதிவு வைக்க வேண்டுமே என்று நீங்கள் பதிவதாகத் தெரிகிறது....

உங்கள் மனதைப் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.... புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்....

Radha N said...

நீங்கள் சென்னைவாசியா என்று எனக்குத் தெரியா து. ஆனால், சென்னைக்கான குடிநீர் ஆதாரமான போருர் ஏரியின் மொத்த அளவு எவ்வளவு என்று தெரியுமா? தற்போது உள்ள ஏரியின் அளவு எவ்வளவு என்று தெரியுமா? தற்போதுள்ள ஏரியின் அளவு, மொத்த அளவில் கால்பங்கிற்கு சற்று ஏறக்குறைய இருக்கும் அவ்வளவுதான். அப்படியானால் கொள்ளயடிக்கப்பட்ட ஏரி எந்த ஆட்சியில் நடந்தது என்று சொ ல்லமுடியுமா? ஒரே பதில் திராவிடக் கட்சிகள். நான் கருணாநிதிக்கு எதிராகவும் பேசவில்லை, ஜெ. சாதகமாகவும் பேசவில்லை.

நீங்கள் குடிநீர் பஞ்சத்தில் பட்டிருந்தால் உணர்ந்திருப்பீர்கள்!

Related Posts Plugin for WordPress, Blogger...