09 May, 2006

ஏரிகள் தேவை!!

ஏரிகள் தேவை!!

குடிநீர் பஞ்சம், வெள்ளப்பெருக்கு இரண்டும் தமிழக மக்களுக்கு, வருடம்தோறும், அனுபவிக்கும் பொன்னான(?) வார்த்தைகள்.

வரும் முதல்வர் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் (உங்கள் கலர் டீவியும் வேண்டாம், கம்ப்யூட்டரும் வேண்டாம், அதனை நாங்களே உழைத்து வாங்க வையுங்கள்; அதற்கான காரணிகளை மட்டும் வகுத்து செயல்படுத்தித்தாருங்கள்) .

ஒவ்வொரு மழை பெய்யும் போதும், இருக்கும்(?) ஏரிகள், குட்டைகள் நிரம்பி (வீட்டுக்குள் புகுந்ததது போக மீதி) கடலுக்குச் சென்றுவிடுகின்றது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பொட்டல் காடுகள், வெற்றுநிலங்கள் (தரிசு), போன்றவை காணப்படுகின்றது. அவற்றில் ஒரு கிலோ மீட்டர் விட்டத்தில் (1 km dia meter) 500 அடி ஆழத்தில் ஒரு குளத்தையோ, குட்டையையோ அல்லது ஏரியையோ அமைக்கவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்தபட்சம் ஒன்று அமைக்கப்படல் வேண்டும். ஊரில் சேரும் மழைநீர் கால்வாய்வழியாக கொண்டு செல்லப்பட்டு சிறு சிறு வடிநீர் குட்டையில் நிரம்பச் செய்து பின்னர் அவை இந்த பெரிய ஏரியில் விழச்செய்யவேண்டும். மனிதர்கள் மாசுபடச்செய்யும் வண்ணம் இல்லாமல் தகுந்த பாதுகாப்பில் இருக்கவேண்டும்.

இதில் சேகரிப்படும் நீர் குறைந்தபட்சம் ஓராண்டுக்காகவது பயன்படும் வண்ணம் கொள்ளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

இந்த நீர்வளத்தினைக் கொண்டு அருகாமையில் இருக்கும் பகுதிகளுக்கு விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பெய்யும் மழையில் நமது தேவைக்குபோக மீதி யைத்தான் கடலுக்கு செல்ல அனுமதி க்கவேண்டும். அந்த அளவிக்கு நாம் நீர்வளபா துகாப்பு மேலாண்மையை கையாளவேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குளங்கள் அமைப்பதற்கு ஆகும் செலவு ஒன்றும்...உங்களின் கலர்டீவி, கம்ப்யூட்டர் செலவினங்களை மிஞ்சாது.

15 comments:

நாமக்கல் சிபி said...

நல்லதொரு வேண்டுகோள் நாகு!

இந்த சிறிய(!?) வயதில் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள்?

Radha N said...

இது வேண்டுகோள் இல்லீங்க....கெஞ்சலுங்க!

Anonymous said...

Excellent post! May be we should do something for this message to reach the government/public. I have heard from a few friends of mine that Thamizmanam bloggers did something to get the attention of the government in a few issues (collective letters or something like that!), I wish we could do something similar regarding this water issue.
I do not have a blog, but I do read a few blogs (atleast once a week) especially forwarded by friends. I am eagerly waiting to see updates/further analysis of this issue.

நாமக்கல் சிபி said...

//இது வேண்டுகோள் இல்லீங்க....கெஞ்சலுங்க//

எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் விளைவு என்னவோ ஒன்றுதான் நாகு அவர்களே!

:(

Sivabalan said...

நாகு,

நல்ல பதிவு!

ஏரி அமைப்பது பல தீர்வுகளில் ஒன்று! நம்ம ஊர்ல Evaporation Loss அதிகம்.இருந்தாலும் நீங்க சொல்லியிருக்கும் தீர்வு ஒரு நல்ல தீர்வுதான்.

ஜெ கொன்டுவந்த Rainwater conservation திட்டம் நல்ல திட்டம்!!

தேசாந்திரி said...

மிக நல்ல பதிவு. விழவேண்டியவர்கள் காதில் விழுந்தால் நன்றாக இருக்கும்.

நேரமிருந்தால் இந்தப் பதிவைப் பாருங்கள்.

Radha N said...

சிபி, அனானி, சிவபாலன் மற்றும் தேசாந்திரி அவர்களுக்கு நன்றி.

நம்ம ஊர்ல Evaporation Loss அதிகம்.

உண்மைதான் சிவபாலன். மூனுவேலை சோறுசா ப்பிடறதை விட, ஒருவேளை கஞ்சி குடிக்கிறது மேல் இல்லையா? தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க வழிமுறைகள் என்ன என்பதை கண்டறியப்படல் வேண்டும். ஏன் நம்மூரில் தான் நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகளும், ஆரா ய்ச்சிக்கூடங்களும் இருக்கின்றனவே?

புதியதாக ஆராய்ச்சி செய்யவேண்டி ஊக்குவிக்கவேண்டியதுதான்! இந்த விசயத்தில் வேதியியல் துறையும், இதுதொடர்புடைய இன்னபிற துறைகளும் ஆராய்ச்சியில் ஈடுபடலாம் என்பது என்னுடைய எண்ணம். இது குறித்த சிறு சிறு ஆய்வறிக்கைகளை (ப்ரொஜெக்ட் report) சமர்ப்பிக்க கல்லூரிமாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். இத்தகை சிறு ஆய்வுகள், பிரம்மாண்டமான கண்டுபி டிப்புகளுக்கு வழிகோலலாம்.

கவிதா | Kavitha said...

//இந்த சிறிய(!?) வயதில் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள்//

சிபி நானும் என் சின்ன வயது படத்தை போட்டு கொள்ளலாம் என இருக்கிறேன்..

நாமக்கல் சிபி said...

//சிபி நானும் என் சின்ன வயது படத்தை போட்டு கொள்ளலாம் என இருக்கிறேன்//

செய்ங்க! சிறு வயதுன்னா 20 வருடத்துக்கு முந்தைய 30 வயதில் எடுத்த படம்தானே?

:-)

Radha N said...

ஏதேது... நீங்க சொல்றதப்பாத்தாக்கா...என்னைய நெசமாலுமே, வயசானவனா ஆக்கிடிவீங்க போல!

Radha N said...

நீர்நிலைகளில், வெப்பம் காரணமாக ஆவியாகிச் செல்லும் நீரின் அளவு கணிசமாக இருக்கின்றது என்று சிவபாலன் சார் சொல்லியிருக்கிறார். அவ்வாறு ஆவியாகிச் செல்லும் அளவினைக் குறைக்க வழிமுறைகள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் வலைபூக்களன்பர்களே!

சுற்றிலும் மரங்கள் நடுவதின் மூலம் கொஞ்சல் குறைகக்கலாமா?
மெல்லிய கம்பிவலை மாதிரி வைத்து (கொ ஞ்சம் மின்சாரத்தினை செலுத்தி) வெப்பத்தின ஈர்க்கச் செய்யமுடியமா? (ஆராய்ச்சி செய்யலா மே?)

Anonymous said...

Very good idfea for areas wher ther are no lakes. Will be still better if the water is made to percolate into subsoil ,inwhich case there will not be any evaporation loss.Also the existing lakes have to be renovated. We had 39000 lakes 60 years ago . 2000 have disappeared sofar.Atleast now let us wake up and save these lakes for posterioty. EngineerNATESAN.

Radha N said...

நன்றி, நடேசன்.

தமிழகம் முழுவதும் ஏற்கனவே நிறைய ஏரிகள் இருக்கின்றன. மொத்தஏரிகளின் எண்ணிக்கையி ல் சரிபாதிக்கும் மேல் இன்றைய நிலையில் கொ ள்ளையடிக்கப்பட்டுவிட்டன. அதற்கு முக்கியகாரணம், அரசியல்வாதிகளும், அதற்கு துணைபோன அரசு ஊழியர்களும். சரி போனவை போகட்டும். இருக்கும் ஏரிகளையாவது காப்பாற்றுவார்கள் என்றுபார்த்தால் அதுவும் கானல் நீரான கதையாகிறது.

நீங்கள் சொல்வது போல, மிச்சம் மீதியிருக்கும் ஏரிகளை காலம் தாழ்த்தாமல் அடுத்த பருவமழைக்கு முன்னராகவே, ஆழமாக தூர்வார வேண்டும். இயன்ற மட்டும் ஏரியினை சுற்றளவையும், ஆழத்தினையும் அதிகபடுத்தி மழைநீர் வீணாவதை தடுக்கவேண்டும்.

Sivabalan said...

நாகு,

எரிகளை பற்றி விழிப்புனர்வு மக்களிடம் எற்படுத்தபடவேண்டும்.

இதனால் பல பிரச்சனைகளுக்கு முடிவு வரும்!!

மா சிவகுமார் said...

நல்ல திட்டம். பஞ்ச நிவாரணத் திட்டத்தின் கீழ் குளங்களைத் தூர் வாரவும், புதிய குளங்களை ஏற்படுத்தவும் நிதி அளிக்கிறார்கள். தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழும் இத்தகைய பணிகளை மேற்கொள்ளலாம்.

இவற்றைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு செலவிளிக்க அவசியம் இல்லாமல், மத்திய அரசின் நிதி மூலமே செயல்படுத்தி விடலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...