29 April, 2006

கொள்ளைப்போகுது நம் பணம்

நகை வாங்கப் போறீங்களா??

நாளை அட்சயதிரிதியைத் திருநாளாம். ஓருவாரத்துக்கும் மேலாகவே மக்கள் அசந்து மறந்துகூட இருந்துவிடக்கூடாதென்பதற்காக, சிறியது முதல் பெரியது வரை உள்ள அனைத்து நகைக்கடைக்காரர்களும் தங்களுடைய நகைக்கடையில் நகைவாங்குமாறு விளம்பரம் செய்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஓருவர் கிராமுக்கு 30 ரூபாய் தள்ளுபடியாம், இன்னொருவர் செய்கூலி இல்லையாம். மற்றொருவர் சாதாக்கற்களுக்கு விலை இல்லவே இல்லையாம். சிரிப்பாய் இருக்கிறது. சாதாக்கற்களுக்கு விலையில்லை என்றால் கல்லின் எடையை நகையில் கழித்து விட்டு பணம் வாங்கட்டுமே. கல்லையும் சேர்த்து தங்மாகவே எடையைக்கணக்கிட்டு வாங்கிவிட்டு, பின்பு என்ன கல்லுக்கு விலையில்லை என்ற மோசடியான விளம்பரம்?

இந்திய நகைச்சந்தையில் நம் மக்களை, கடைக்காரர்கள் இவ்வளவு காலமாய் மேலும் ஒரு மோசடியில் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். அதாவது ஒவ்வொரு நகையினை செய்யும் பொழுதும், அந்த தங்கத்திலிருந்து, சிறிது சேதாரமாகப் போய்விடும். இந்த சேதாரமானது குறைந்தபட்சம் 2% த்திலிருந்து 18% வரை கணக்கிடப்படுகின்றது. இதற்குரிய பணம் நகைவாங்கும் வாடிக்கையாளரிடம், நகையுடன் சேர்த்தே வசூல் செய்யப்படுகின்றது.

அப்படியானால் இந்த சேதாரத் தங்கமானது யாருக்குச் சொந்தம்? நகைவாங்கும் நமக்கா அல்லது கடைக்காரருக்கா? நமக்குத்தானே சொந்தம். அப்படியிருக்க, இந்த நகைக்கடைக்காரர்கள், இந்தத் தங்கத்தை நமக்கு தரமாட்டார்கள். அவர்களே வைத்துக்கொள்வார்கள்.

இது கொள்ளைதானே?

நீங்க என்ன சொல்றீங்க?

9 comments:

மா சிவகுமார் said...

நாகு,

தியாகராய நகரில் நகைக் கடைகளிலும், பட்டுச் சேலைக் கடைகளிலும் புரளும் பணம் தமிழர்களை பொருளாதார அடிமைகளாகத் தான் வைத்திருக்கும். இந்த அட்சய திருதியை இந்தக் கூட்டத்தின் இன்னொரு ஏமாற்று வேலை.

அன்புடன்,

Radha N said...

இதில் இன்னொரு கூத்து என்னவென்றால், இந்த தி னத்தில் வாங்க மாற்று மதத்தினர் கூட வருகின்றனர் என்றால் நீங்கள் சொல்வதில் பொய்யி ல்லை என்றுதான் தோன்றுகிறது.

துளசி கோபால் said...

நாகு,

அது என்னங்க மாற்று மதத்தினர்? நகைக்கு மதமும் உண்டா?

நீங்க சொல்ற மாற்று மதத்தினர்தாங்க உண்மையாவே நிறைய தங்கம் அணியறாங்க.

வல்லிசிம்ஹன் said...

நாகு,
அவர்கள் சொன்னால்
வாங்குபவர்கள் யோசிக்க வேண்டாமா?
தெரிந்தே செய்கிறார்கள்.நல்லவை பெருக ,நல்லவை செய்ய வேண்டும்
என்றுதான் பெரியவர்கள் வார்த்தை.

Radha N said...

இந்த வருடம் அக்சய திருதியை அன்றுமட்டும், இந்தியாவின் மொத்த விற்பனை 70 டன்னாம். நினைத்துப் பார்க்கவே மலைப்பாய் இருக்கிறது. ஒருநாளில் இந்தியர்களின் சேமிப்பு உயர்ந்தது ஒருவகையில் மகிழ்வாகக்கூட இருக்கி றது.

Radha N said...

test

Chellamuthu Kuppusamy said...

இது மட்டுமின்றி காதலர் தினம் போன்ற மெற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தினாலும் இதே விளைவு தான். குடிப்பவனுக்கு ஒரு காரணம் தேவைப் படுவது போல், விற்பவனுக்கும் ஒரு காரணம் தேவைப் படுவது இயல்பு தானே!!

குப்புசாமி செல்லமுத்து

Maraboor J Chandrasekaran said...

நாகு, என்னய்யா சேமிப்பு, சில இடங்கள்ல புருசன் காரன் நகை வாங்கக் கூட்டிகிட்டு போலைன்னு விஷம் குடிச்சு செத்த பொண்ணுங்க பத்தி பேப்பர்ல பார்த்தீங்களா? பகுத்தறிவு படிக்கவெச்சா மட்டும் வரும்கிறது தப்பு! அன்னிக்கி ஒரு நாள் மட்டும் 198ரூ, கிராமுக்கு விலை ஏறியிருக்கு, முட்டா ஜெனங்களும் வாங்கியிருக்காங்க! அட்சய திரிதியை பற்றி பல நல்ல தகவல்களை நகைக்கடைக்காரர்களும், புடவைக்கடைக்காரர்களும் தங்கள் சவுரியத்துக்கு மாத்திகிட்டாங்க! அன்று எந்த வேலை செய்தாலும், பல மடங்கு பெருகும். நிறைய தானம் செய்ய அந்தக் காலத்துல இந்த நாளைத்தான் தேர்ந்தெடுப்பாங்களாம்! இப்ப என்னடான்னா, வாங்கி உள்ள பூட்றாங்க!

நாமக்கல் சிபி said...

//அன்று எந்த வேலை செய்தாலும், பல மடங்கு பெருகும். நிறைய தானம் செய்ய அந்தக் காலத்துல இந்த நாளைத்தான் தேர்ந்தெடுப்பாங்களாம்! இப்ப என்னடான்னா, வாங்கி உள்ள பூட்றாங்க//

அதே! அதே!

Related Posts Plugin for WordPress, Blogger...