17 மார்ச், 2014

TNPSC VAO Exam March 2014 : VAO Exam Vacancy 2014 : Total 2342 Posts

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

2342 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

விளம்பரம் எண்.384
அறிவிப்பு எண்.07/2014
விளம்பரம் தேதி 17/03/2014
கடைசி தேதி 15/04/2014
கட்டணம் செலுத்த 
கடைசி தேதி  04.17.2014 
தேர்வு தேதி 06.14.2014 நேரம் காலை 10 முதல் 1 மணி வரை.

பதவி Post:
 • கிராம நிர்வாக அதிகாரி (Village Administrative Officer - VAO) - 2342 பதவிகள் Vacancy - SSLC / 10 ம் வகுப்பு / மெட்ரிகுலேஷன் - அடிப்படைச் சம்பளம் 5200 மற்றும் தரஊதியம் 2400 (PB1 GP 2400) - வயது  பொதுப்பிரிவினருக்கு 30 ஆண்டுகள், மற்றவர்களுக்கு 40 வயது

பொது வழிமுறைகள்:
 • குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆண்டுகள்.
 • குறைந்தபட்ச கல்வி தகுதி 10 ம் வகுப்பு. அதற்கு மேலும் மேற்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • தமிழ்வழிக்கல்வி (PSTM தமிழ் மீடியம்) படித்தவர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு உண்டு.
 • எழுத்துத் தேர்வு முறை: பொது அறிவு 75 கேள்விகள் கிராம நிர்வாகத்தின் செயல்பாடு 25 கேள்விகள்,நுண்ணறிவு  20 கேள்விகள் , பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 80 கேள்விகள்
 • தேர்வு நேரம் 3 மணி நேரம்.
 • தேர்வு கட்டணம் 125 (விண்ணப்ப கட்டணம் 50; தேர்வு கட்டணம் 75), ஒரு முறை மட்டும் பதிவு செய்யும் முறையில் விண்ணப்பிப்பவர்கள் 75 ரூபாய் செலுத்தினால் போதும் (one time registration method)

செய்தித்தாள் விளம்பரம்  http://epaper.dailythanthi.com/showxml.aspx?id=16180721&code=6006
ஆன்லைன் விண்ணப்ப  http://tnpscexams.net/

சென்ற வருட விளம்பரம்  http://www.tnpsc.gov.in/notifications/ 26_2012_not_eng_vao2k12.pdf
மற்றும்  http://www.tnpsc.gov.in/notifications/26_2012_not_tam_vao2k12.pdf 

©  www.tngovernmentjobs.in
இதையும் நீங்கள் விரும்பலாம்:

15 ஜூலை, 2013

திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர் - உதவி மற்றும் இணைப் பேராசிரியர் பணிவாய்ப்புகள்


திருவள்ளுவர் பல்கலைக்கழகம் [www.tngovernmentjobs.in]
திருவள்ளுவர் பல்கலைக்கழகம், 
சேர்க்காடு
வேலூர், தமிழ்நாடு

விளம்பர எண்.DIPR/4852/Dis/2013 
விளம்பர தேதி 15.07.2013 
கடைசி தேதி 08.08.2013 

பதவி:
  • உதவி பேராசிரியர் (தமிழ்) - 1 எம்பிசி - விளம்பர எண். 6751A/2013
  • உதவி பேராசிரியர் (பொருளாதாரம்) - 1 எம்பிசி - விளம்பர எண். 6751B/2013
  • இணை பேராசிரியர் (தமிழ்) - 1 எஸ்சி / எஸ்சி (அருந்ததியர்) - விளம்பர எண். 6751A/2013
  • இணை பேராசிரியர் (பொருளாதாரம்) - 1 எஸ்சி / எஸ்சி (அருந்ததியர்) - விளம்பர எண்.6751B/2013

  குறிப்பு: 17.07.2013 அன்று அல்லது அதற்கு பிறகு விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்  http://www.thiruvalluvaruniversity.ac.in/  .  

  அறிவிப்பு  http://epaper.newindianexpress.com/c/1339488

13 அக்டோபர், 2012

வா... ...
பேசாத உதடுகள்
பேசும் கண்கள் ...
பிறக்கிறது - கவிதை!
கண்ணே உனை கண்டவுடன்

காற்றில் ஊசலாடும் உன் முன்
நெற்றி முடிபோல் - அலைபாயுமென் மனதை
அள்ளி முடிக்க துள்ளியோடி வா வாடா மலரே
என் இதய தோட்டத்தின்
ஒரே மலரே!

நாகு

06 ஜூலை, 2011

சென்னையில் மத்திய அரசுப் பணி


பல குறைபாடுகள் நபர்கள் அதிகாரமளித்தல் தேசிய நிறுவனம், ​சென்னை 
National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD) Chennai.

​பதவி : இயக்குநர்
​தேர்ந்தெடுக்கும் முறை ​: டெபுடேசன் அல்லது தற்காலிக அடிப்படையில்.

​மேலதிகவிவரங்களுக்கு http://tngovernmentjobs.blogspot.com/

05 ஜூலை, 2011

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பணியிடம்


Go to fullsize image

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பிரின்சிபால் மற்றும் லெக்சரர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், கணிப்பொறியியல் மற்றும் வணிகம் பாடங்களுக்கான இப்பணியிடங்கள் தற்காலிகம் மட்டுமே.

மேலதிக விவரங்களுக்கு http://www.tngovernmentjobs.blogspot.com/

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு


Go to fullsize image
சென்னைப் பல்கலைக்கழகம் கம்ப்யூட்டர் புரோகிராமர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

கம்ப்யூட்டர் புரோகிராமர் = 1 எண்ணிக்கை

டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் = 9 எண்ணிக்கை

விண்ணப்பம் மற்றும் ​மேலதிக விவரங்களுக்கு http://www.tngovernmentjobs.blogspot.com/

விண்ணப்பத்துடன் ரூபாய் ஐ​நூறுக்கான கட்டணம் செலுத்த வேண்டும்

பாரத மிகுமின் நிலையம் ராணிப்பேட்டை - வேலைவாய்ப்பு


Go to fullsize image

ராணிப்பேட்டை, பாரத மிகுமின் நிலையத்தில் ஐடிஐ அல்லது மேல்நிலைவகுப்பில் தொழில் கல்வி பயின்றவர்களுக்கான தொழில் பழகுநர் பயிற்சி தொடங்க இருக்கிறது.

கடைசி தேதி 25.07.2011

விவரங்களுக்கு http://www.tngovernmentjobs.blogspot.com/

04 ஜூலை, 2011

தூத்துக்குடி துறைமுகத்தில் வேலைவாய்ப்பு


தூத்துக்குடி துறைமுகத்தில் வேலைவாய்ப்பு
​மத்தியமின்சார கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு

​ஏஐசிடியில் வேலைவாய்ப்பு

​மத்தியபிரதேச அரசில் வேலைவாய்ப்பு

​திருப்பத்துர் மாவட்டத்​தில் சைனிக் பள்ளியில் வேலைவாய்ப்பு

​இந்தியன் ஆர்மியில் வேலைவாய்ப்பு

​தேசிய​ யுனானி மருத்துவ பயிலகத்தில் வேலைவாய்ப்பு

​பார்டர் செக்யுரிடி போர்சில் வேலைவாய்ப்பு

​இ​ஸ்ரோவில் வேலைவாய்ப்பு

​அகமதாபாத்தின் பிசிகல்ரிசர்ச் லேபில் வேலைவாய்ப்பு

​க​ர்நாடக மத்திய பல்கலையில் வேலைவாய்ப்பு

​அஸ்சாம் ரைபில்சில் வேலைவாய்ப்பு

​இந்தியன் கோ​ஸ்ட் கார்​டில் வேலைவாய்ப்பு

​அணுகவும் http://tngovernmentjobs.blogspot.com/

24 ஜூன், 2011

தமிழ்நாடு காகிதம் செய்திதாள் நிறுவனம், சென்னைதமிழ்நாடு காகிதம் செய்திதாள் நிறுவனத்தில் வேலைவாய்ப்​பு

விளம்பர எண்  - DIPR/522/2011

விளம்பர தேதி - 21.06.2011

கடைசி தேதி - 06/07/2011 05:30 PM


பணி - முதன்மை பொது மேலாளர் (உற்ப்பத்தி)
பதவி எண்ணிக்கை - ஒன்று
சம்பளம் - 41500-1400-55500 (CTC Rs.1.31 lakh pm)


மேலதிக விவரங்களுக்கும் மேலும் பல அரசு வேலைவாய்ப்புக்கும் http://tngovernmentjobs.blogspot.com/

20 ஜூன், 2011

மத்திய குடிசைத் தொழில் கழகம், புதுதில்லி - மேலாளர் பதவி

மத்திய குடிசைத் தொழில் கழகம்

இந்திய கைவினை பொருள் மற்றும் கைத்தறி சந்தைபடுத்துதலில் ஈடுபடும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்த மத்தியஅரசு நிறுவனம் நேரடி ஆட்சேர்ப்பு முறையில் கீழ்க்காணும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

மேலாளர் : 1 பதவி


துணை மேலாளர் : 3 பதவிகள்

மேலதிக விவரங்களுக்கு http://tngovernmentjobs.blogspot.com/

19 ஜூன், 2011

சென்னை மெட்ரோ ரயிலில் வேலை

சென்னை மெட்ரோ ரயில் பிஜி டிப்ளமோ படிப்பினை சென்னை ஐஐடி துணையுடன் வழங்குகிறது. இந்த டிப்ளமோவினை வெற்றிகரமாக முடிக்கும் நபர்களை ​சென்னை மெட்ரோ ரயிலே உதவி மேலாளர் பதவியில் அமர்த்திக் கொள்ளும்.

தகுதி ​: பொறியியலில் 70 சதவிகித மதிப்பெண் மற்றும் கேட் ஸ்கோர்
துறை : சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்
மொத்த எண்ணிக்கை பத்து மட்டுமே

கடைசி தேதி 20.06.2011

மேலும் விவரங்களுக்கு http://tngovernmentjobs.blogspot.com/2011/06/chennai-metro-rail-pg-diploma-in-metro.html

18 ஜூன், 2011

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சென்னை
தமிழ்நாடு கு​டிசை மாற்று வாரியம் சென்னை ஆறு மாதகால கீழ்கண்ட தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

1. ஜி.ஐ.எஸ். நிபுணர்
2. சிஸ்டம் அட்மி​னிஸ்ட்ரேடர்
3. நகரமைப்பு நிபுணர்
4. திட்டமிடல் அலுவலர்
5. டேட்டா பேஸ் ​மேலாளர்

தகுதி மற்றும் மேலதிக விவரங்களுக்கு அணுகவும் http://tngovernmentjobs.blogspot.com/

17 ஜூன், 2011

ரப்பர் வாரியம் - கோட்டயம்ரப்பர் வாரியம்
கோட்டயம்
கேரளா

ரப்பர் வாரியம் கோட்டயம் கீழ்க்காணும் பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

1. இணை இயக்குநர் ( பயிர் மேலாண்மை)
2. துணை இயக்குநர் ( தாவரவியல்)
3. முதுநிலை அறிவியலாளர் (சோதனை நிலையம்)

மேலும் விவரங்களுக்கு கிளிக்கவும் http://tngovernmentjobs.blogspot.com/

மத்திய மாநில அரசு பணி வாய்ப்புகள்


​1​. இஸ்ரோவில் இளநிலை இந்திமொழிபெயர்ப்பாளர், இந்தி தட்டச்சர், லைட்வெகிகில் டிரைவர் மற்று​ம்
ஹெவி வெகிகில் ​டிரைவர் பணி வாய்ப்புகள்

2​. ஜபல்பூரில் அமை​ந்திருக்கும் இந்தியன் இன்ஸ்டிடி​யுட் ஆப் இன்பர்மேசன் டெக்னாலாஜியில் உதவி நூலகர், துணைப் பதிவாளர்,செயற்பொறியாளர், ஆராய​ச்சி அறிவியலாளர், வடிவமைப்புபொறியாளர், ஆராய்ச்சிபொறியாளர், பணிவாய்ப்பு அலுவலர்

3​.டெல்லி கன்​டோன்மென்டில் கணிப்பொறி புரோகிராமர்

4​. ஒரிசாவின்பெ​ர்காம்புர் பல்கலையில்பேராசிரியர் பணியிடங்கள்

​​மேலும் பல அரசு பணிவாய்ப்புக​ளுக்கு http://tngovernmentjobs.blogspot.com/

15 ஜூன், 2011

இன்ஸ்டிடி​யுட் ஆப் பிசிக்ஸ், புவ​னேஸ்வர், ஒரிசா -- நூலகர்

இன்ஸ்டிடி​யுட் ஆப் பிசிக்ஸ், புவ​னேஸ்வர், ஒரிசாஇன்ஸ்டிடி​யுட் ஆப் பிசிக்ஸ், புவ​னேஸ்வர், ஒரிசா நூலகர் பணியிடத்திற்காக விண்ணப்பத்தினை வரவேற்கிறது

பதவி எண்ணி​க்கை ஒன்று

மேலும் விவரங்களுக்கு http://tngovernmentjobs.blogspot.com/ 

14 ஜூன், 2011

சி.எஸ்.ஐ.ஆர் - ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியர்ங் ரிசர்​ச் சென்டர் சென்னைசி.எஸ்.ஐ.ஆர் 
ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியர்ங் ரிசர்​ச் சென்டர்
சென்னை


விளம்பர எண் : எஸ்.இ2/2011
விளம்பர தேதி : 12.06.2011
ஆன்லைன் விண்ணப்பம் கடைசி தேதி : 09.07.2011
அதை பிரிண்ட் அ​வுட் செய்து அனுப்ப கடைசி தேதி 15.07.2011
பதவி : தொழில் நுட்ப அலுவலர் கிரேடு 
எண்ணிக்கை: மொத்தம் நான்கு
விண்ணப்பம் மற்றும் மேலும் விவரங்களுக்கு http://tngovernmentjobs.blogspot.com/தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் பிரிவு அலுவலர் பதவிக்கான விண்ணப்பத்தினை வரவேற்கிறது.

பதவி - ​ பிரிவு அலுவலர் (section officer)
படிப்பு - ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம்
சம்பளம் - 9300 - 34800  GP 4700
ஒதுக்கீடு -  பட்டியல் இனத்தவருக்கான ஒதுக்கீடு
எண்ணிக்கை - ஒன்று
கடைசி நாள் - 30.06.2011

சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பத்துடன் சான்றொப்பம் மிட்ட சான்றுகளுடன் பல்கலைக்கழத்திற்க்கு அனுப்பி வைக்கவும்

மேலும் விவரங்களுக்கு http://tngovernmentjobs.blogspot.com/

11 ஜூன், 2011

இந்தியன் இன்ஸ்​டிடியூட் ஆப் இன்பர்மேசன் டெக்னாலஜி, டிசைன் & மானுபாக்சரிங்


இந்தியன் இன்ஸ்​டிடியூட் ஆப் இன்பர்மேசன் டெக்னாலஜி, டிசைன் & மானுபாக்சரிங்


மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள ஜபல்பூரில் இருக்கும் இந்தியன் இன்ஸ்​டிடியூட் ஆப் இன்பர்மேசன் டெக்னாலஜி, டிசைன் & மானுபாக்சரிங் கீழ்க்காணும் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது

உதவி பொறியாளர் (எலக்ட்ரிகல்), இளநிலை பொறியாளர், முதுநிலை நூலக உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், ஆய்வக உதவியாளர், இளநிலை எழுத்தர், கணிப்பொறி புரோகிராமர், டிரைவர், பிளம்பர், எலக்ட்ரிசியன்.

மேலும் விவரங்களுக்கு http://tngovernmentjobs.blogspot.com/

நேர்முகத்தேர்வு: மத்திய சணல் மற்றும் இழை ஆராய்ச்சி நிறுவனம்

நேர்முகத்தேர்வு

மத்திய சணல் மற்றும் இழை ஆராய்ச்சி நிறுவனம்


ஆராய்ச்சி உதவியாளர் மற்று​ம் மூத்த ஆராய்ச்சி உதவியாளர் ஆகிய தற்காலிக பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு 30.06.2011 அன்று காலை பத்து மணிக்கு கீழ்க்காணும் முகவரியில் நடை​பெறுகிறது,

CRIJAF (h.q.)
Central Research Institute for Jute & Allied Fibres (ICAR)
Barrackpore (Sahab Bagan Bus stope on Barrackpore Barasat Road)

Kolkata 700120, West Bengal
Phone: 033-2535-6121/6122  Fax: 033-25350415  Mail:crijaf@wb.nic.in


மேலும் விவரங்களுக்கு கிளிக்கவும்

more govt jobs click here

05 ஜூன், 2011

தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைடியில் பல்வேறு வகையான பணிவாய்ப்புகள் 
தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைடி, பல்வேறு வகை தற்காலிக பதவிகளுக்கு விண்ணப்பங்களை 10.06.2011 மாலை 5 மணிவரை வரவேற்கிறது. மேலும் விவரங்களுக்கு 5.6.2011 தி இந்து நாளிதழ் 15 ஆம் பக்கத்தினை காணவும்.

  முகவரி

 
திட்ட இயக்குநர்,
தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைடி, 
417, பாந்தியன் சாலை,
எழும்பூர், சென்னை 600 008,
 
​மேலதிக விவரங்களுக்கு இங்கே கிளிக்கவும்

 

 

காபி வாரியத்தில் பணிவாய்ப்புகள் (மத்திய அரசு)


காபி வாரியத்தில் பணிவாய்ப்புகள் (மத்திய அரசு)


மத்திய அரசின் காமர்ஸ் & இண்டஸ்ரி அமைச்சகத்தின் ​கீழ் இயங்கும் காபி வாரியம் ​கீழ்க்காணும் 89 பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

துணை இயக்குனர் (15600 - 39100) = 8 எண்ணிக்கை

உதவி சிறப்பாளர் (9300 - 34800) = 8 எண்ணிக்கை

ஆராய்ச்சி உதவியாளர் (9300 - 34800)= 16 எண்ணிக்கை

இளநிலை தொடர்பு அலுவலர் (9300 - 34800 )= 5 எண்ணிக்கை

விரிவாக்க ஆய்வாளர் (5200 - 20200)= 52 எண்ணிக்கை

முழுவிவரங்கள் மற்றும் விண்ணப்பம் தரவிறக்கத்திற்கு இ​ங்கே செல்லவும்.

பல்லவன் கிராம வங்கியில் வேலை வாய்ப்பு


பல்லவன் கிராம வங்கியில் வேலை வாய்ப்பு


சேலத்தினை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பல்லவன் கிராம வங்கி, இந்தியன் வங்கியின் துணைநிறுவனமாகும். இவ்வங்கி தற்போது அலுவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு மொத்தம் 84 இடங்கள் ஆன்லைவன் விண்ணப்பங்களை வரவேற்கிறது

கடைசிதேதி 13.06.201

மேலும் விவரங்களுக்கு இங்கே செல்லவும்

04 ஜூன், 2011

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தில் பணி வாய்ப்பு

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தில் பணி வாய்ப்பு


தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்​தில் தற்காலிக பணியிட​த்திற்கு நேர்முகத்தேர்வு 09.06.2011 அன்று காலை 11 மணிக்கு 417 பாந்தியன் சாலை, எழும்பூரில் அமைந்திருக்கும் இவ்வலுவலகத்தில் நடைபெறுகிறது.


1. ரிசேர்ச் அசோசியேட்


2. சீனியர் ரிசேர்ச் பெலோ


3. ​ஜூனியர் ரிசேர்ச் பெலோ


4. லேப் அசிஸ்டன்ட்


5. லேப் அட்டெண்டர்


முழுவிவரங்களுக்கு இ​ங்கே செல்லவும்

மத்திய அரசு நிறுவனம் - பிட்டர்கள் தேவை

17 ஏப்ரல், 2011

கடல் பூதம்

உற்சாக வரவேற்பை பெற்றது கடல் பூதம்


16.04.2011 மாலை 5 மணிக்கு முனைவர். வேலுசரவணன் மற்றும் குழுவினர் நிகழ்த்திய குழந்தைகளுக்கான நாடகம் கடல் பூதம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை இரு நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கண்டு மகிழ்ந்தனர். இதில் குழந்தைகள் மிகவும் உற்சாகத்துடன் ஆரவாரமாக குரல்களை எழுப்பி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியின் நிறைவில் முனைவர். க. அறிவொளி, இயக்குனர், தமிழக பொது நூலக துறை அவர்கள், முனைவர் வேலுசரவணன் மற்றும் குழுவினரை நினவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். பின்னர் தங்களது கருத்துக்களை தெரிவிக்க குழந்தைகள் போட்டிபோட்டு முன்வந்தனர்.

ref: anna centenary library09 ஏப்ரல், 2011

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான கோடைகால மனமகிழ் நிகழ்வுகள்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான
கோடைகால மனமகிழ் நிகழ்வுகள்அப்பாடா..... ஸ்கூல் லீவு விட்டாச்சு..... பக்கத்து வீட்டு மாமி அவுங்க கொழந்தைய பாஸ்ட் டிராக் டிராயிங் கிளாஸ்ல சேத்து விட்டுடாங்கன்னு ஒங்க பையன் அவனையும் சேர்த்து விடச் சொல்லி நச்சரிக்கிறானா....இல்லன்னா நாமலே போங்கு புடிச்சு அதே கிளாஸ்ல பையன கொண்டு போயி தள்ளிவிட்டுட்டு.... மனசுக்குள்ளே சந்தோசப்பட்டுபீங்களே..... வுடுங்க பாஸ், வீட்டுக்கு வீடு வாசப்படித்தேன், ​என்ன நாஞ் சொல்றது சரிதானே.

ஓகே, ஓகே, விசயத்துக்கு வாரேன்னேன்........பு​துசா கட்டியிருக்குற நம்ம அண்ணா ​சென்டினரி லைப்ரரியில இந்த சம்மருக்கு குட்டீஸ்கள் எஞ்சாய் பண்றதுக்காக சூப்பரா சில பல புரோகிராம் ஏற்பாடு செஞ்சிருக்காங்க.... என்ன எல்லாரும் வர்ரீங்களா ஒ​ங்க குட்டீஸ்ங்களோட.. அப்புறமா நம்ம ஏ.சி.எல் பக்கத்துல (என்னங்க நீங்க அண்ணா நூற்றாண்டு நூலகதத்துக்கு பக்கத்துலங்க) கொழந்தைக்க சுத்தி பாக்க நெறைய இடங்கள் இருக்குங்க... பெரியார் அறிவியல் தொ​ழில் நுட்ப காட்சியகம் மற்றும் கோளரங்கம், சில்ட்ரன்ஸ் பார்க், காந்தி மண்டபம் அங்கனயிருந்து கொஞ்ச தூரரரத்துல.......அடையாறு சுற்றுச்​சூழல் பூங்கா​.


அப்புறம் ​​தேதிய சொல்லுறேன் நல்லா நோட் பண்ணிடுங்க.....16ந் தேதி கடல்ல பூதம் (கு​ட்டீசு வயசு 4 - 14)


17ந் தேதி என் கைகுட்டை (குட்டீசு வயசு 4 - 7)


23ந் தேதி யானை கதை (குட்டீசு வயசு 6 - 12)


24ந் தேதி யோகா (குட்டீசு வயசு 4 - 14)


30ந் தேதி நாட்டிய சங்கமம் (குட்டீசு வயசு 4 - 14)


மே மாசம் 1ந் தேதி கலரிங் (குட்டீசு வயசு 7 - 14)


மே மாசம் 7ந் தேதி பஞ்சாபி கதை ​நேரம் (குட்டீசு வயசு 5 - 10)


மே மாசம் 8ந் தேதி குழந்தைகளின் கதை உருவா​க்கும் திறன் (குட்டீசு வயசு 4 - 7)

ஒ​ரு விசயத்த மட்டும் நல்ல நெனவுல வெச்சுக்கோங்க....இதுல முன்னாடி வர்ரவுங்களு​க்குத்தான் அனுமதியில முன்னுரிமை கிடைக்கும், சீட்ஸ் எல்லாம் லிமிடெட் தாங்க, சோ......மறக்காம கால் போடுங்க 044 - 65515031.

என்னது எப்படி வர்ரதுன்னு கேட்கு​றீங்களா..... அது ​ரொம்ப ஈசிதாங்க..... நீங்க பஸ்ஸா​, டிரெய்னா..... பஸ்சுன்னா சில்ட்ரன்ஸ் பார்க், அண்ணா யுனிவர்சிட்டி, ஐஐடி பஸ் ஸ்டாப்ல எறங்குனீங்கன்னாக்கா சும்மா பத்து நிமிச நடராஜா ச​ர்வீஸ்ல வந்துரலாம் (காசு இருந்தா ஆட்டோ கூட ஓகே தான் பாஸ்!)

டிரெய்னுன்னாக்கா.... (பற​க்கும் ரயிலுங்கோ) கோட்டூர்புரம்-ன்னு கேட்டு எறங்கிடுங்க....இல்ல நீ சொன்னா... நான் நம்ப மாட்​​டேன்னு அடம்புடிச்சாக்கா, இங்க போயி செக் பண்ணிக்கோங்கோ http://annacentenarylibrary.blogspot.com/

​என்ன லைப்ரரியில மீட் பண்ணுவோமா.......


04 மார்ச், 2011

உன் நினைவு

நகற்றி விடும் முடி கூட
நகராமல் மீண்டும் உன் முன்நெற்றியில்
நகராது உன் நினைவு
என் நினைவில் !

28 டிசம்பர், 2010

நீ முன்னாலே போனால் நான் பின்னாலே வார‍ேன்....mp3

நான் ரசித்த பாடல்

நீ முன்னாலே போனால் நான் பின்னாலே வார‍ேன்....mp3

download mp3
http://www.mediafire.com/?qglcd89839u2avh

படம்: வாங்க மாப்பிள்ளை வாங்க

1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிவசங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவசங்கர்,தேவிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்*
*(ref: http://ta.wikipedia.org)

15 நவம்பர், 2010

மயிலிறகு

மயிலிறகு

மறந்து போன அவள் நினைவு
மறுபடியும்........
மகன் புத்தகத்தில்
மயிலிறகு!

18 பிப்ரவரி, 2010

நான் நைந்து போக வேண்டும்

கொடியிடையில்
கை இடை புகுந்து
நான்நைந்து போக வேண்டும்

முகம் புதைத்து
மனம் ‍ெதாலைக்க
ஒரு மடி வேண்டும்

தொடை வளைவில் என்
இதழ் வழுக்கி
நான் இளைப்பார வேண்டும்

கை வளைவில்
கண்ணயர்ந்து
கனா காண வேண்டும்


ஓர் கை பிடியடங்கும்
உன் ‍இடைதன்னை
என் கை தாங்க வேண்டும்

மிச்சமிருக்கும் உன் போதை
பார்வையை
என் விழிகோப்பை
தாங்க வேண்டும்

15 செப்டம்பர், 2009

அந்த வார்த்தைகள்

நீ சொன்ன
எத்தனையோ வார்த்தைகளை மறக்க முடிந்த
என்னால்,
ஏனோ தெரியவில்லையடி,
மறக்க முடியவில்லை;
"என்னை மறந்து விடு" என்ற அந்த வார்த்தைகளை.

விட்டுக்கொடுத்தேன்

விட்டுக்கொடுத்தால்
வாழ்க்கை இனிக்குமாம்; காதலிச் சொன்னாள்.
விட்டுக்கொடுத்தேன் அவளை.

14 செப்டம்பர், 2009

நீயும் சினிமாவும்

"அவருக்கு சினிமான்னா சுத்தமா
பிடிக்காது மாமி
"
இது
எதிர் வீட்டு மாமியிடம் என் மனைவி.

நான்
திரைப்படங்கள் பார்ப்பதை நிறுத்தி
வருடங்கள் பல உருண்டோடி விட்டன,
நாம் பார்த்த படமே
எனக்கு கடைசிப் படமாக இருக்கட்டுமே-
இது நான்!

நான் என்று கூறியதில்
நீயும் ஒளிந்து கொண்டிருக்கிறாய் என்ற நினைப்பில்
இன்னமும் நான்!

12 செப்டம்பர், 2009

10 செப்டம்பர், 2009

மறந்து போகிறேன்

நீ இமைக்க மறக்கும் போதெல்லாம்
நான் சுவாசிக்க மறந்து போகிறேன்!

எது அழகு?

எது அழகு?

நெற்றித் திருநீற்று படகினிலே;
வட்டக் குங்குமம் பொட்டழகு!

வெட்கப்படுகையிலே உன்
கட்டைவிரல் கோலம் அழகு!

சாலையைக் கடக்கையில்
எதார்த்தமாய் தொடுவது போல்,
நிஜமாய் தொட்ட உன்
சுட்டுவிரல் ஸ்பரிசம் அழகு!

என் கன்னக் குழி மறைக்க,
நீ தருவதாய் சொன்ன
உன் கன்னம் ஓர் அழகு

காதலுக்கு அழகு காத்திருப்பதுதான்;
ஆனாலும்
எனை காக்க வைத்துவிட்டு,
கல்லறையில் உறங்குவது - உனக்கு
எந்த வகையில் அழகு?

08 செப்டம்பர், 2009

தேடுகிறேன்

மறந்து போன என் தாய்மொழியை உன்
திறந்து மூடும் விழி வழியில்
தேடுகிறேன்

05 செப்டம்பர், 2009

மறுக்கப்பட்ட பெண்மை

இன்று உயிர்மை வலைதளத்தில் இந்த கட்டுரையினை படிக்க நேர்ந்தது. இரா. சோமசுந்தரம் அவர்களின் மறுக்கப்பட்ட பெண்மை என்னும் கட்டுரை மனதினை மிகவும் பாதித்தது.

படித்துப்பாருங்கள் http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=518

02 செப்டம்பர், 2009

ஏன் வந்தாய்

அரைக்கிறுக்கனாக இருந்தேன்;
வந்தாள்,
வழிநடத்தினாள், வாழ்ந்தேன்.
விட்டுச்சென்றாள்,
முழுக்கிறுக்கனானேன்!

01 செப்டம்பர், 2009

இன்னமும் நீ

அத்தனை சத்தியங்களும் சன்னமாய்
உடைந்து போகின்றன;
மறையாமல் இன்னமும் நீ
மனதில் இருப்பதால்!

எங்கே என் கோபம்?

மீண்டும் மீண்டும்
வெட்கம் மானம் கெட்ட
முட்டாளாக
நான்;

மொபைல் பேச்சு அவளுடன்
அரைமணிக்கும் மேலாக!

31 ஆகஸ்ட், 2009

அவளுக்குப் பிடித்தது

என்னிடம் உள்ள எல்லாமும்
பிடிக்கும் என்றாள்

என் உயிரைக் கூட என்பதை
உணர்ந்தேன்,
அவள் திருமண சேதியை கேட்டபோது.

உன் குரல்

அழைப்பது யாராக இருந்தாலும்,
கேட்பது - உன் குரலாகவே உணர்கிறேன்!
என்ன செய்தாயடி
என்னை?

மல்லிகை

ஐந்து ரூபாய் நாணயங்களை
உண்டியல் போட்டேன்;
அவள் கூந்தலில் மல்லிகையாய்!

26 ஆகஸ்ட், 2009

நீ - என் கடிகாரம்

ஓடாத கைக்கடிகாரம்
ஓயாமல் நினைவூட்டுகிறது
நீ இல்லை என்ற
நினைவை.
(உன் பிரிவை! )

உன் நினைவு என் உணவு

சில வேளைகளில் பாதியுமாய்,
பல வேளைகளில் முழுவதுமாய்,
வீட்டிற்குச் செல்கிறது - என்
டிபன் பாக்ஸ்.
காரணம் கேட்கிறாள் தாய்
எப்படிச் சொல்வேன் நான்;
உன்
நினைவுகளை மட்டுமே
உட்கொள்கிறேன் என்று!

உன் பு(ன்ன)கைப் படம்

இப்பொழுதெல்லாம்,
எப்பொழுதும் - என்
செல்லின் ஸ்கிரீன்
ஈரமாகவே உள்ளது.. .. ...
முத்தத்தில் நனைந்து.
ஸ்கிரீன் சேவராகவும்,
வால் பேப்பராகவும்,
நீயிருக்கையில்.. .. ..
காரணம் வேறென்னவாக இருக்க முடியும்?

25 ஆகஸ்ட், 2009

மிஸ்டு கால்

அனைத்து மிஸ்டு கால்கலுக்கும்
திருப்பி அழைக்கிறேன்.

ஏதாவது ஒன்றில்
நீ இருக்கமாட்டாயா என்ற
நினைப்பில்!

யாரிடம் செல்வது?

தைரியம் இல்லாதவர்கள்
காதலிக்கக் கூடாதாம். . . .
கருமம் பிடித்த காதலுக்குத் தெரியவில்லையே. . .
தைரியமானவர்கள் யாரென்று ?

மறக்க நினைக்கிறேன்

மறக்க நினைக்கிறேன்

உன்னைக் காதலிக்கும் போது
நினைத்ததை விட
அதிகமாய் நினைக்கிறேன்.. .. .. .. ..
உன்னைப் பிரிந்து மறக்க நினைக்கையில்

26 ஜூன், 2009

கந்தல் இதயம் !

மிச்சமிருக்கும் உன் பார்வையால்
என்
சொச்ச உயிரையும் எடுத்து விடு.
அறுந்து தொங்கும் என் இதயம் .. ..
அதிக நாள் தாங்காதடி

கந்தல் இதயம்
காத்து வாங்குதடி .. ..
காதல் புயலால்
கசங்கிய பிறகு.

நீ! ....என் கண்ணீர்

அழகு என்றால் யார் என்று கேட்டாய்
நான் -
நான் என்றேன்...
நொடியில் கோபம் கொண்டு சிணுங்கிணாய்,
கண்ணீர் துளிகள் என்னிடத்தில் .. ..!
ஆம்
என்னுள் இருப்பவள் நீ தானே

16 பிப்ரவரி, 2008

நீ! ....என் நிழல்?

கட்டிபிடிக்க நினைத்தேன்
முடியவில்லை,
அருகிலிருந்தும்
நெருங்கமுடியவில்லை....

நினைவிலிருப்பவள்
நீயாகயிருப்பதால்
என் நிழல்
நீயன்றி யாராகயிருக்க முடியும்?

03 பிப்ரவரி, 2008

Good Remix

விசாலின் ரீமிக்ஸ் பாடல் ஒன்றினை கேட்டுப்பாருங்கள். மிகவும் அருமையாக இருக்கிறது.

12 பிப்ரவரி, 2007

கிறுக்கல்கள்!!

நீ
==

என்னிடம் எதுவுமில்லை
உன்னிடம் தருவதற்கு
சாரி......
எல்லாமுமாய் நீயாயிருப்பதால்.


நீ
==

யோசிப்பதற்கு எதுவுமில்லை
என்னுள்
எங்கும் நீயிருப்பதால்!!


சுகம்!!
=====

இருவிழிச் சிறையில்
ஒருவனை வதைப்பதில்
இவளுக்கு ஏனோ....
இத்தனை சுகம்!!

நான் ரசித்த கவிதைகள்

பேச்சு
--------


யாருக்கும் தெரியாமல்
பேசவரும்போதெல்லாம்
யாராவது வந்துவிடுகிறார்கள்.

யாரும் வராமல் நீ வந்துவிட்டால்
வராமல் நிற்கிறது பேச்சு.


தவிப்பு
--------

தெரிந்தோ தெரியாமலோ
நடந்துவிடுகிற எல்லா சந்திப்புகளிலும்
தெரிந்தே சாகிறது தவிப்பு!!


எழுதியவர் : ஏக்நாத்
கண்டெடுத்தது குங்குமம் dated 18.02.2007

13 ஜனவரி, 2007

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் - ஒரு பார்வை

தற்போது மத்திய அரசு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மான்யம் வழங்கி வருகிறது. இந்த மான்ய விலை சிலிண்டரானது பொதுமக்கள் அனைவருக்கும் கிடைத்து வருகிறது (ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி). ஆனால் இளகுரக வாகனங்கள் வைத்திருக்கும் சிலர், இப்படி மான்யவிலையில் வழங்கப்பெரும் சிலிண்டர்களை தங்கள் வீட்டின் உபயோகத்திற்கு மட்டும் இன்றி, வாகனங்களுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனைக் கட்டுப்படுத்த ஒரு எரிவாயு உருளை வாங்கிய தேதியில் இருந்து, இருபத்தோரு நாட்களுக்குப் பின்னரே, மற்றொரு உருளைக்கு பதிவு செய்யமுடியும் என்று விதிமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைதான் சிலவேளைகளில் நம்மை கஷ்டப்படுத்துகிறது. பல்வேறு சூழ்நிலைகாரணமாக முன்னரே எரிவாயு உருளை தீர்ந்து போகும்நேரங்களில், குடும்பத்தினர் படும்பாடு சொல்லி மாளாது.

அதற்கு பதில் அரசு கீழ்க்காணுமாறு மாற்றியமைத்தால் உபயோகமாக இருக்குமே!

1. உயர்வருவாய் வகுப்பினருக்கு மான்ய விலையில் எரிவாயு உருளை வழங்கக்கூடாது. அவர்களுக்கு மான்யமற்ற விலையிலேயே உருளை வழங்கவேண்டும். வேண்டுமானால், அவர்கள் உபயோகிக்கும் உருளையின் பணத்திற்கு, வருமானவரி விலக்கு அளிக்கலாம்.

2. சமையல் எரிவாயு உருளை பயன்படுத்தப்படும் வாகனங்கள் பிடிபட்டால், குறைந்தபட்சம் ஒருலட்ச ரூபாய் தண்டத்தொகை கட்டப் பணிக்கப்படவேண்டும். அப்படி அவர்களால் செலுத்த இயலாத சூழலில் வாகனத்தில் ஏலத்தில் விட்டு பணத்தினை கையகப்படுத்த வேண்டும். இது நிச்சம் தவறு செய்பவர்களை தடுக்கும்.

3. நடுத்தர மற்றும் ஏழைகளுக்கு இதே இருபத்தோரு நாட்கள் நிபந்தனை நீடித்திட வேண்டும். ஆனால் இருபத்தோரு நாட்களுக்கு முன்னதாக எரிவாயு உருளைத் தேவைப்பட்டால், மான்யமற்ற விலையில் உடனடியாக வழங்கிட வேண்டும்.

09 ஜூன், 2006

தென்னைமரக்கிளை!

தென்னைமரக்கிளை!

பார்த்து ரசியுங்கள். மின்னஞ்சலில் வந்தது. இந்த மரம் எங்கேயிருக்கிறது என்றுத் தெரியவில்லை. மரங்களில் இத்தகைய மாற்றங்கள் எப்படி உருவாகிறது என்பதை அறிந்தவர் சொல்லுங்களேன்.


24 மே, 2006

வலைப்பதிவு ஆய்விற்காக...

மதுமிதா அவர்களின் வலைப்பதிவு ஆய்விற்காக...

வலைப்பதிவர் பெயர்: நாகு

வலைப்பூ பெயர் : கடற்கரை மற்றும் தூரிகைச்சிதறல்

சுட்டி(url) : http://nagaindian.blogspot.com
http://thoorigaichidharal.blogspot.com

ஊர்: சென்னை

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: தினமலர் நாளிதழ்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : அக்டோபர் 2005 ல் ஆங்கிலத்தில் , பிறகு நான்கைந்து மாதங்கள் அந்தப்பக்கமே . பிறகு ஏப்ரல் 2006 முதல் தமிழில் பக்கங்கள் வெளியிட ஆரம்பித்தேன்

இது எத்தனையா வது பதிவு: 15

இப்பதிவின் சுட்டி(url): http://nagaindian.blogspot.com/2006/05/blog-post_24.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: மனதில் பட்டதைச் சொல்ல

அனுபவங்கள்: கொஞ்சம் இனிப்பு , கொஞ்சம் காரம்

பெற்ற நண்பர்கள் : வயது வித்தியாசம் இன்றி நிறைய

கற்றவை: தெரிந்துக்கொள்ளவேண்டியவை இன்னும் இருக்கிறது மணல் போல
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: சுதந்திரம் என்பதன் முழுஅர்த்தம்

இனி செய்ய நினைப்பவை: அவ்வப்போது சொல்லவேண்டியதும், செய்யவேண்டியதும்

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: புத்தகங்களுக்கிடையில் ஒரு ! ஆனால் புத்தகப்புழு . நூலகராக . கொஞ்சம் ஓவியம், கொஞ்சம் இசை இவை என் நெஞ்சம் . அஞ்சல்தலை சேகரி ப்பில் கொஞ்சம் ஆர்வம்

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் யாருக்காவது ஒரு நன்மையாவது செய்துவிட வேண்டும்.

18 மே, 2006

வறட்சி மாவட்டங்கள்!!

வறட்சி மாவட்டங்கள்!!


இராமநாதபுரம் போன்ற வறட்சி மாவட்டங்களுக்கு, இந்த புதிய அரசு என்ன செய்வதாக உத்தேசம் என்று தெரியவில்லை. கலர் டீவியும், 2 ரூபாய்
அரிசியும் நிரந்தரமாற்றத்தை ஏற்படுத்தாது. தமிழக அரசு உடனடியாக, விவசாயம் செய்வதற்கு ஏதுவாக, நீர்நிலை ஆதாரங்களை உருவாக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.

17 மே, 2006

'H' முத்திரை மீண்டும் தேவை!

'H' முத்திரை மீண்டும் தேவை!

இரண்டு ரூபாய் அரிசி, உண்மையான ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மட்டுமா அல்லது குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்குமா? பொதுப்படையாகப் பார்த்தால் குடும்பஅட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த இரண்டு ரூபாய் அரிசி ஒதுக்கப்படும். அப்படி ஒதுக்கப்படும் அரிசியினை எத்தனை குடும்பத்தினர் வாங்குகின்றனர் என்று பா ர்க்கவேண்டும். உண்மையிலே வாங்காதவர்களின் அரிசி கள்ளமார்க்கெட் பக்கம் ஒதுங்க வாய்ப்புள்ளது.

நியாயவிலைக்ககடைகளின், இத்தகைய செயல்பாடுகளைத் தவிர்க்கத்தான் முந்தைய அரசு 'ஹெச்' முத்திரை மாதிரி சமாச்சாரமெல்லாம் கொண்டுவந்தது.

'ஹெச்' முத்திரை கட்டாயமாக்கப்படவேண்டிய ஒன்று. வேண்டுமானால் வருமானவரம்பினை மாற்றி யமைத்துக்கொள்ளலாம்.

09 மே, 2006

ஏரிகள் தேவை!!

ஏரிகள் தேவை!!

குடிநீர் பஞ்சம், வெள்ளப்பெருக்கு இரண்டும் தமிழக மக்களுக்கு, வருடம்தோறும், அனுபவிக்கும் பொன்னான(?) வார்த்தைகள்.

வரும் முதல்வர் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் (உங்கள் கலர் டீவியும் வேண்டாம், கம்ப்யூட்டரும் வேண்டாம், அதனை நாங்களே உழைத்து வாங்க வையுங்கள்; அதற்கான காரணிகளை மட்டும் வகுத்து செயல்படுத்தித்தாருங்கள்) .

ஒவ்வொரு மழை பெய்யும் போதும், இருக்கும்(?) ஏரிகள், குட்டைகள் நிரம்பி (வீட்டுக்குள் புகுந்ததது போக மீதி) கடலுக்குச் சென்றுவிடுகின்றது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பொட்டல் காடுகள், வெற்றுநிலங்கள் (தரிசு), போன்றவை காணப்படுகின்றது. அவற்றில் ஒரு கிலோ மீட்டர் விட்டத்தில் (1 km dia meter) 500 அடி ஆழத்தில் ஒரு குளத்தையோ, குட்டையையோ அல்லது ஏரியையோ அமைக்கவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்தபட்சம் ஒன்று அமைக்கப்படல் வேண்டும். ஊரில் சேரும் மழைநீர் கால்வாய்வழியாக கொண்டு செல்லப்பட்டு சிறு சிறு வடிநீர் குட்டையில் நிரம்பச் செய்து பின்னர் அவை இந்த பெரிய ஏரியில் விழச்செய்யவேண்டும். மனிதர்கள் மாசுபடச்செய்யும் வண்ணம் இல்லாமல் தகுந்த பாதுகாப்பில் இருக்கவேண்டும்.

இதில் சேகரிப்படும் நீர் குறைந்தபட்சம் ஓராண்டுக்காகவது பயன்படும் வண்ணம் கொள்ளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

இந்த நீர்வளத்தினைக் கொண்டு அருகாமையில் இருக்கும் பகுதிகளுக்கு விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பெய்யும் மழையில் நமது தேவைக்குபோக மீதி யைத்தான் கடலுக்கு செல்ல அனுமதி க்கவேண்டும். அந்த அளவிக்கு நாம் நீர்வளபா துகாப்பு மேலாண்மையை கையாளவேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குளங்கள் அமைப்பதற்கு ஆகும் செலவு ஒன்றும்...உங்களின் கலர்டீவி, கம்ப்யூட்டர் செலவினங்களை மிஞ்சாது.

29 ஏப்ரல், 2006

கொள்ளைப்போகுது நம் பணம்

நகை வாங்கப் போறீங்களா??

நாளை அட்சயதிரிதியைத் திருநாளாம். ஓருவாரத்துக்கும் மேலாகவே மக்கள் அசந்து மறந்துகூட இருந்துவிடக்கூடாதென்பதற்காக, சிறியது முதல் பெரியது வரை உள்ள அனைத்து நகைக்கடைக்காரர்களும் தங்களுடைய நகைக்கடையில் நகைவாங்குமாறு விளம்பரம் செய்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஓருவர் கிராமுக்கு 30 ரூபாய் தள்ளுபடியாம், இன்னொருவர் செய்கூலி இல்லையாம். மற்றொருவர் சாதாக்கற்களுக்கு விலை இல்லவே இல்லையாம். சிரிப்பாய் இருக்கிறது. சாதாக்கற்களுக்கு விலையில்லை என்றால் கல்லின் எடையை நகையில் கழித்து விட்டு பணம் வாங்கட்டுமே. கல்லையும் சேர்த்து தங்மாகவே எடையைக்கணக்கிட்டு வாங்கிவிட்டு, பின்பு என்ன கல்லுக்கு விலையில்லை என்ற மோசடியான விளம்பரம்?

இந்திய நகைச்சந்தையில் நம் மக்களை, கடைக்காரர்கள் இவ்வளவு காலமாய் மேலும் ஒரு மோசடியில் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். அதாவது ஒவ்வொரு நகையினை செய்யும் பொழுதும், அந்த தங்கத்திலிருந்து, சிறிது சேதாரமாகப் போய்விடும். இந்த சேதாரமானது குறைந்தபட்சம் 2% த்திலிருந்து 18% வரை கணக்கிடப்படுகின்றது. இதற்குரிய பணம் நகைவாங்கும் வாடிக்கையாளரிடம், நகையுடன் சேர்த்தே வசூல் செய்யப்படுகின்றது.

அப்படியானால் இந்த சேதாரத் தங்கமானது யாருக்குச் சொந்தம்? நகைவாங்கும் நமக்கா அல்லது கடைக்காரருக்கா? நமக்குத்தானே சொந்தம். அப்படியிருக்க, இந்த நகைக்கடைக்காரர்கள், இந்தத் தங்கத்தை நமக்கு தரமாட்டார்கள். அவர்களே வைத்துக்கொள்வார்கள்.

இது கொள்ளைதானே?

நீங்க என்ன சொல்றீங்க?

26 ஏப்ரல், 2006

கவிதை--நியாயமா?

நியாயமா?
=========

நெற்றி திருநீற்று படகினிலேவீற்றிருக்கும்
வட்டக் குங்குமம்; பொட்டழகு!

வெட்கப்படுகையிலே - உன்
கட்டைவிரல் கோலம் அழகு!

சாலையைக் கடக்கையில்,
எதேச்சையாய் தொடுவது போல் -
நிஜமாய் தொட்ட - உன்
சுட்டுவிரல் ஸ்பரிசம் அழகு!

என்கன்னக் குழிமறைக்க நீ
தருவதாய்ச் சொன்ன -உன் கன்னம்; ஓர் அழகு!

காதலுக்கு அழகு காத்திருப்பது தான்!
என்னை காக்க வைத்துவிட்டு
கல்லறையில் நீ உறங்குவது -- எந்த வகையில் அழகு?

08 ஏப்ரல், 2006

ரூபாய் நோட்டில் கிறுக்காதீர்!

ரூபாய் நோட்டில் கிறுக்காதீர்!

இந்த சம்பவம் இன்று நேற்று மட்டுமல்ல...தினந்தோறும் நடைபெற்றுதான் வருகின்ற ஒன்று.

சென்னையில் அசோக்நகரில் 24 மணிநேர வங்க்கிளை ஒன்று உள்ளது. ISO சான்றளித்த வங்கி. வங்கியின் காசாளுனர் அருகான்மையில் ஒரு அறிவிப்பு பலகையில் ஆங்கிலத்தில் சிலவாசகங்கள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்று...ரூபாய் தாள்களின் மீது எதனையும் கிறுக்கக்கூடாது என்று. ஆனால் அந்த அறிவிப்பு யாருக்கு என்று மட்டும் போடவில்லை. (ஆமாம்...நமக்கா அல்லது வங்கி ஊழியர்களுக்கா?)

கொஞ்சம் மொத்தமாக (பத்து இருபது நோட்டுகளை) கொண்டுபோய் கொடுங்களேன். உடனே, காசாளுநர் அதனை வாங்கி எண்ணி இரப்பர் பேண்டு போட்டு, அதன் வாட்டர்மார்க் மீது அதன் எண்ணிக்கையினை எழுதி ஒரு வட்டம் போடுவார். (இத்தனைக்கும் இது முழுமையும் கணிணிமயமாக்கப்ட்ட வங்கியாம்....சிரிப்பு வருதுங்கோ!!) அதே வங்கியில் சில மேதாவி காசாளுநர்கள் இருக்கின்றார்கள். ஆமாம், சிலராவது வாட்டர்மார்க் மீது மட்டும் தான் கிறுக்கின்றனர். ஆனால் அவர்களோ வாட்டர்மார்க்கின் கடைகோடியின் காந்திபடத்தின் மீது (right side of INR from water mark). ரூபாய்நோட்டின் மீது கிறுக்கக்கூடாது என்று போட்டிருக்கே...என்று அப்பாவித்தனமாக கேட்டேனுங்கோ...அதற்கு அவர் ஒரு பதில் சொன்னார் பாருங்கோ....அப்படியே புல்லரிச்சு போய்ட்டேனுங்க... அதாவது வாட்டர் மார்க் மீது மட்டும் கிறுக்கக்கூடாதுன்னு உத்தரவாம்.....
ஒரு காசாளுநர் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 100 நோட்டுகளில் கிறுக்கினால், ஒரு வருடத்தில்....அதே போல் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கியில் நடந்தால்....அடக்கடவுளே!!!
வேலியே பயிரை மேய்கிறதே!!!!

இது மட்டும் அல்ல....இந்திய ரயில்வே ரிசர்வேசன் டிக்கட் எடுக்கச்செல்லும் போதும், கவுன்ட்டரில் (98%) இதே கூத்து தான்.
அன்பர்களே...இனிமேல் நீங்கள் எங்கு பணபரிமாற்றம் செய்யும் போதும் காசாளுநர்கள் ரூபாய் நோட்டின் மீது கிறுக்கினால், அங்கேயே கண்டியுங்கள். உங்கள் அலுவலகத்தின் அக்கவுண்டன்ட் கூட இது போல செய்கின்றாரா என்று பாருங்கள்.....திருத்துங்கள்....
அல்லது குறைந்தபட்சம் ....நீங்கள் கிறுக்குவதையாவது நிறுத்துங்கள்....செய்வீர்களா?

மாறுங்கள்....தானே மாறுவார்கள்

மாறுங்கள்....தானே மாறுவார்கள்.

தற்போது SBI ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவவனவன் படிச்சிட்டு வேலையில்லையின்னைன்னு நொந்துநூடுல்சு ஆகிகிட்டு இருக்கானுங்க....இவுங்கக என்னன்னா வேலைநிறுத்தம் அது இதுன்னு இம்சைபடுத்துறாங்க...

இதுனால எத்தனை பேரு கடினப்படுகின்றார்கள் என்று கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும். அரசின் பென்சன் பெரும்பாலம் இந்தவங்கியின் மூலமாகத்தான் வருகின்றது. இந்த சூழலில் இவர்களின்வேலை நிறுத்தபோராட்டத்தினால் எத்தனை பேர் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டிருப்பார்கள்.

சரி விசயத்திற்கு வருவோம்.

பென்சன்தாரர்களைத்தவிர மற்ற அனைவரும், இந்த வேலைநிறுத்தம் நின்றவுடன் இந்த வங்கிக்கு சென்று நமது கணக்கினை கேன்சல் செய்து விட்டு மற்றொரு அரசு (சரி உங்க இஷ்டப்பட்ட வங்கி) வங்கியில் கணக்கை தொடங்கினால் இவர்கள் பாடு என்னவாகும்...
நான் தயார் !!! நீங்கள் தயாரா???
Related Posts Plugin for WordPress, Blogger...